Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலக கோப்பை; இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி?

    டி20 உலக கோப்பை; இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி?

    இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலக கோப்பை தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

    இந்நிலையில், இன்று அடிலெய்ட் மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது. 

    பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் நன்றாக விளையாடி வருவது நம்பிக்கைத் தந்தாலும், ரோஹித் சர்மாக தொடர்ந்து சொதப்பி வருவது பயத்தை ஏற்படுத்துகிறது. கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் கை கொடுத்தால் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பான ஸ்கோரை எட்டும். பந்துவீச்சை பொறுத்தவரையில், புவனேஷ்வர், அர்ஷ்தீப் ஷமி உள்ளிட்டோர் விக்கெட்டுகளை கைப்பற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில், பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், மொயீன் அலி உள்ளிட்டோரும், ஆல்-ரவுண்டிங்கில் பென் ஸ்டோக்ஸும், பௌலிங்கில் சாம் கரன், ஆதில் ரஷீத் ஆகியோரும் தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே இந்தியாவுக்கு இந்த ஆட்டம் மாபெரும் சவாலாக இருக்கும்.

    இந்தியா பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இதையும் படிங்க: டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....