Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான்..

    டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான்..

    உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

    2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இத்தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதனின் ஒரு படிநிலையாக இன்று சிட்னியில் முதல் அரையிறுதி நடைபெற்றது. 

    இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணியின் சார்பில் பின் ஆலென் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    ஆனால், 4 ரன்களில் பின் ஆலென் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து டிவான் கான்வே  21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய  கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தானின் கையே தொடர்ந்து மேலோங்கி இருந்தது. பின்னர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணைந்து ரன்களை அதிகப்படுத்தினர். 

    இதையும் படிங்கடி20 உலக கோப்பை; இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறப் போவது யார்?

    46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வில்லியம்சன் பெவிலியன் திரும்பினார். இருப்பினும், மற்றொரு புறத்தில் சிறப்பாக விளையாடிய மிட்செல் அரைசதம் விளாசினார். மொத்தத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டக்களத்தில், டேரில் மிட்செல் 53 ரன்களுடனும், ஜேம்ஸ் நீஷம் 16 ரன்களுடனும் இருந்தனர். 

    இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பாகிஸ்தான் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரிஸ்வான் மற்றும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இந்த இணை தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முற்பட்டும் இந்த இணையை வீழ்த்த முடியவில்லை. அணியின் ஸ்கோரும் உயர்ந்துகொண்டே சென்றது. 

    இந்நிலையில்தான், 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாபர் அசாம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து முகமது ஹாரிஸ் களமிறங்கினார். இவரும் நிதானமாக விளையாட தொடங்கினார். மற்றொரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த ரிஸ்வான் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    இதன்பின் ஹாரிஸ் உடன், ஷான் மசோத் இணைந்தார். இன்னும் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 30 ரன்களோடு பெவிலியன் திரும்பினார், ஹாரிஸ். இதைத்தொடர்ந்து அகமத் களமிறங்கினார். 19.1 ஓவரிலேயே பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. மசோத் 3 ரன்களுடனும், அஹ்மத் ரன்கள் எதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி 2022-ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முகமது ரிஸ்வானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. 

    நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணி இறிதிப் போட்டிக்கு  பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்கமோடி வருகையால் பதட்டம்! ஐந்தடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....