Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமா? உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை.!..

    பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமா? உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை.!..

    நாட்டின் உள் பாதுகாப்பு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் பணியில் மத்திய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. 

    இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள உளவுத்துறை அதிகாரிகளின் உயர்நிலைக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் மாலை 5 மணி அளவில் முடிந்தது. இந்தக் கூட்டம் தில்லியில் ரகசிய இடத்தில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    நாட்டின் பாதுகாப்பு நிலைமை மட்டுமின்றி பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக நிதியளித்தல், போதைப்பொருள் பயங்கரவாதம் போன்ற செயல்கள் குறித்து இந்தக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    மேலும் நாட்டின் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, உளவுத்துறை இயக்குநர் தபால் டேகா, உளவுத்துறை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். 

    இதையும் படிங்க: மோடி வருகையால் பதட்டம்! ஐந்தடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....