Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்ற 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து..!

    உச்சநீதிமன்ற 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து..!

    உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றிருக்கும் டி.ஒய்.சந்திர சூட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றார். மேலும் அவர் கடந்த மாதம் 11 ஆம் தேதி அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட்டை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். 

    இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட்டை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். 

    இந்நிலையில், இன்று அவர் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

    டி.ஒய்.சந்திர சூட் 1959 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றார். இவர் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார். அதன்படி, டி.ஒய்.சந்திர சூட் வருகிற 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தேதி வரை பொறுப்பில் இருப்பார். 

    இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் டி.ஒய்.சந்திர சூட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற டாக்டர் டிஒய் சந்திரசூட் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மோடி வருகையால் பதட்டம்! ஐந்தடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....