Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை: உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை..!

    கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை: உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை..!

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வரும் சீதாராமன் என்ற நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அப்படி அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

    இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தனர். 

    பக்தர்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் உட்பட யாருமே கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. தடையை மீறி யாரேனும் செல்போனை பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது. மேலும் செல்போன் கோயிலுக்குள் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை  கிளை நீதிபதிகள் கண்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

    இதையும் படிங்கவெறும் ரூ.7000-த்தை வைத்து சிலை கடத்தல் மன்னன் போட்ட மாஸ்டர் பிளான்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....