Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமார் திரைப்படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்தா? - வெளிவந்த அட்டகாச தகவல்!

    அஜித்குமார் திரைப்படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்தா? – வெளிவந்த அட்டகாச தகவல்!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளத நிலையில், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அஜித்குமாரின் 62-வது திரைப்படமாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், இத்திரைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விக்னேஷ் சிவன், ஜி.பி.முத்து இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியதால் இம்முடிவு என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

    மேலும், அஜித்குமார் தொடர்ந்து சீரியஸான திரைப்படங்களிலேயே நடித்து வரும் நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் மாறுபட்டதாக இருக்குமென எதிர்பாரக்கப்படுகிறது. 

    இதையும் படிங்கஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி பாடலை வெளியிட்டு… புகழாரம் சூட்டிய கனிமொழி எம்பி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....