Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி பாடலை வெளியிட்டு... புகழாரம் சூட்டிய கனிமொழி எம்பி

    ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி பாடலை வெளியிட்டு… புகழாரம் சூட்டிய கனிமொழி எம்பி

    ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பாடலை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ளார். 

    தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையும், பிரபல பாடகியுமான ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியு்ள்ள திரைப்படம்தான், ‘அனல் மேலே பனித்துளி’. இத்திரைப்படத்தை, கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ஆர்.வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

    தொடர்ந்து, ‘அனல் மேல் பனித்துளி’ திரைப்படம் குறித்த அப்டேட்டுகளும், பாடல்களும் வெளியான நிலையில், நேற்று உமாதேவி வரிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் வீடியோவை  திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி வெளியிட்டார். 

    மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்ணை , உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது. அப்படி வழமைகளை உடைக்கும் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என கனிமொழி தெரிவித்துள்ளார்.

    ‘அனல் மேல் பனித்துளி’  நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ நிற்கவில்லை; சூசகமாக தகவலை வெளியிட்ட அதிதி சங்கர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....