Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்இந்தியாவின் 4 பெரும் நகரங்களில் களம் இறங்கிய ஜியோ 5G சேவை - இனி ஸ்பீடு...

    இந்தியாவின் 4 பெரும் நகரங்களில் களம் இறங்கிய ஜியோ 5G சேவை – இனி ஸ்பீடு எப்படி இருக்கும் ?

    தசரா விழாவை முன்னிட்டு இந்தியாவின் பெரும் நகரங்களில் அதிவேக தொலைத்தொடர்பு சேவையான 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.

    இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே 4G சேவையில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது 5G சேவை தொடங்கப்படுவதற்கான முயற்சிகளில் அம்பானி குழுமத்தினர் இறங்கினர்.

    அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு, கடந்த சனிக்கிழமை (அக் 01) அன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதற்கட்டமாக தசரா பண்டிகை கொண்டாட்டமான இன்று மும்பை, டெல்லி , கொல்கத்தா, மற்றும் வாரணாசி ஆகிய 4 இடங்களில் 5-ஆம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையான 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சேவைகள் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வெற்றி பெற்றால் ரூ. 2 டிரில்லியன் முதலீடு செய்து, கூகுளுடன் இணைந்து ,குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், அதன் டிஜிட்டல் வணிகத்தை இயக்குவதற்கு கிளவுட் அடிப்படையிலான பெர்சனல் கம்ப்யூட்டர்கள் போன்ற வயர்லெஸ் பிராட்பேண்டைப் பயன்படுத்தி தீர்வுகளை அறிமுகப்படுத்தும்.

    இதையும் படிங்க:‘விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது’-நியாய விலைக் கடைகளுக்கு அரசு எச்சரிக்கை

    இதையடுத்து, ஜியோ 5G கால் தடத்தை மாதந்தோறும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், டிசம்பர் 2023 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஒவ்வொரு நகரம், தாலுகா மற்றும் தாலுகாவிற்கும் ஜியோ 5G சேவையை வழங்குவோம்” என்று ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நான்கு நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும், குறிப்பாக 5G சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜியோ நிறுவனத்தில் தற்போது 425 மில்லியன் பயனாளர்கள் இருக்கும் நிலையில் இந்த 5G சேவையால் இன்னும் அதிகமாக பயனாளர்கள் ஜியோவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பும் அந்நிறுவனத்திற்கு கூடியிருக்கிறது .

    5G சேவையின் சிறப்பம்சங்கள் :

    ஜியோவின் True 5G சேவையின் பீட்டா சோதனையானது தற்போதுள்ள ஜியோ பயனர்களுக்கு அழைப்பின் மூலம் வழங்கப்படும். ஜியோ ட்ரூ 5G-யின் பீட்டா சோதனையைப் பெறும் வாடிக்கையாளர்கள் 1ஜிபிபிஎஸ் வரை டேட்டா வேகத்தைப் பெறுவார்கள்.

    ஜியோ 5G வெல்கம் ஆஃபர் சோதனைக்கு அழைக்கப்படும் பயனர்கள் தானாகவே ஜியோ ட்ரூ 5G சேவைக்கு மேம்படுத்தப்படுவார்கள் மேலும் அவர்களின் 5ஜி-இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனில் 5G சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை. ஜியோ ஏற்கனவே தங்கள் கைபேசிகளில் ஜியோ 5ஜியை இயக்க ஃபோன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளது.

    “நாட்டிற்காக ஜியோ ஒரு லட்சிய மற்றும் வேகமான 5G ரோல்-அவுட் திட்டத்தை தயாரித்துள்ளது. 5G சலுகை பெற்ற சிலருக்கு அல்லது நமது பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு பிரத்யேக சேவையாக இருக்க முடியாது. இது இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிகத்திற்கும் கிடைக்க வேண்டும்” என்று ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்
    தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார் .

    மேலும் ஏற்கனவே ஏர்டெல் 5G சேவையை 8 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் வோடபோன், ஐடியா இந்தியாவில் அதன் 5ஜி சேவைகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....