Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு4 கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி! பாசத்துடன் வளர்த்து வரும் மூதாட்டியின் அன்பு கதை

    4 கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி! பாசத்துடன் வளர்த்து வரும் மூதாட்டியின் அன்பு கதை

    தான் பசிக்கு வைத்திருந்த பாலை ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்து வருகிறது. 

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சிதான், சிவபுரம். இந்தப் பகுதியில் வசிப்பவர்தான் மூதாட்டி வசந்தா மகாலிங்கம். இவரது கணவர் மற்றும் மகன்கள் இறந்த நிலையில், தற்போது கால்நடை வளர்ப்பதை தொழிலாகக் கொண்டு வருகிறார். அதன்படி, மூன்று ஆடுகளை அவர் வளர்த்து வருகிறார். 

    இந்நிலையில், மூன்றில் ஒரு ஆடு கருவுற்று கடந்த 3-ம் தேதி அதிகாலை இரண்டு ஆட்டுக்குட்டிகளை ஈன்றது. அந்த இரண்டு குட்டிகளில் ,ஒரு குட்டி ஆடு மட்டும்
    நான்கு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளது. இதனால், வசந்தா மிகவும் வேதனையடைந்துள்ளார். இந்த ஆட்டுக்குட்டியை எவ்வாறு காப்பாற்றுவதென அவர் கண் கலங்கினார். அக்கம் பக்கத்தினர் இவருக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். 

    இதையடுத்து, வசந்தா அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு அளிக்கும் பால் ஊட்டியை பெற்று அதில் தான் பசிக்கு வைத்திருந்த பாலை அந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. 

    இது குறித்து, வசந்தா மகாலிங்கம் தெரிவித்துள்ளதாவது :

    அனைவரையும் இழந்து தனியாக வசிக்கும் இந்த நிலையில், இந்த கால்நடைகள் பெரிதும் பாசத்துடனும் தன்னிடம் வந்த நிலையில், ஒரு ஆட்டுக்குட்டியின் பிறப்பு எனது மனதை சிறிது நேரம் கலங்க செய்தது.

    மனிதனே மாற்றுத்திறனாளியாக இருந்து கடும் சிரமங்களை சந்திக்கும் நிலையில், மனதை தேற்றிக்கொண்டு இந்த ஆட்டுக்குட்டியை தொடர்ந்து காப்பாற்றிவிடுவேன். 

    மேலும், தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு வழங்கும் இலவச கறவை மாடு திட்டத்தில் தனக்கு கறவை மாடுகள் வழங்கினால், எவ்வித தடையும் இன்றி அனைத்தையும் தன்னுடைய உறவினர் போல் வளர்ப்பேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கறவை ஆடுகள் வழங்கும் திட்டத்தையும் அரசு நடைமுறைபடுத்த வேண்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க:ஆற்றில் குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்த ஆறு பேர்.. தமிழக அரசு நிதியுதவி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....