Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட் வழங்கிய ஊழியர்கள்; 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

    ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட் வழங்கிய ஊழியர்கள்; 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

    உணவகத்துக்கு சாப்பிட சென்ற குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் வழங்ப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    பாகிஸ்தான், லாகூர் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் இஃபால் பார்க் (Greater Iqbal Park) அருகே, பொயட் ரெஸ்டாரண்ட் (Poet Restaurant) என்ற உணவகம் உள்ளது. 

    இங்கு பாகிஸ்தானை சேர்ந்த முகம்மது ஆதில் என்பவர், தனது குடும்பத்துடன் பிறந்த நாள் விழா எடுத்ததாக கூறப்படுகிறது. 

    அப்போது, உணவக ஊழியர்கள் அங்கிருந்தவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை கொடுத்துள்ளனர். அங்கிருந்த ஒரு பாட்டிலை முகமது ஆதிலின் சகோதரியின் மகன் அகமது, தனது கைகளை அந்த தண்ணீரால் கழுவியுள்ளார். 

    உடனே அகமது வலி தாங்க முடியாமல் அழ ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அவரின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போன்று காயங்கள் உண்டானது. 

    அதன்பிறகு, அந்தப் பாட்டில்களில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் இருப்பது தெரியவந்தது. 

    இதனிடையே, முகமது சகோதரியின் இரண்டரை வயது மகன் வஜிஹா அந்த பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து தெரியாமல் குடித்துவிட்டார். 

    இதையடுத்து, இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வஜிஹாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், `ஹோட்டல் மேலாளர் முகமது ஜாவேத் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் மேலாளரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ‘விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது’-நியாய விலைக் கடைகளுக்கு அரசு எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....