Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி

    தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி

    சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக அதிகரித்துள்ளது. 

    தங்கம் விலை நிலவரம்:

    சென்னையில் நேற்று ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 38,200 ரூபாய்க்கு விற்பனையானது.

    இந்நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 60 ரூபாய் அதிகரித்து ரூ.4,835-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ரூ.38,680-க்கு விற்பனையாகிறது 

    கடந்த 2 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை 1040 ரூபாய் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கள் விலை அதிகரித்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

    வெள்ளி விலை நிலவரம்: 

    சென்னையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று 66 ரூபாய் 70 காசுகளுக்கு  விற்பனையான நிலையில் இன்று 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, சர்வதேச விலை அப்படியே இருந்தால் வெள்ளியின் விலை அதிகளவில் உயர்வது வழக்கம்.

    இதையும் படிங்க: ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட் வழங்கிய ஊழியர்கள்; 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....