Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்தொடர் சரிவில் அதானி குழுமம்; 10 லட்சம் கோடி சரிவு!

    தொடர் சரிவில் அதானி குழுமம்; 10 லட்சம் கோடி சரிவு!

    அதானி குழுமத்தின் பங்குகள் விலை பங்குச் சந்தையில் தொடர்ந்து எட்டு நாள் வணிகத்தில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

    உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர், கௌதம் அதானி. இவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இச்சூழலில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி அதானி குழுமம் பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றஞ்சாட்டியது.

    இதுகுறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், இது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், எட்டாவது நாளாக திங்கள்கிழமையும் 10 சதவீத அளவுக்கு வீழ்ச்சியை அதானி குழுமம் சந்தித்தது. அந்த ஒட்டுமொத்த குழுமத்தின் பங்குகள் விலை பங்குச் சந்தையில் தொடர்ந்து எட்டு நாள் வணிகத்தில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

    இதனால், அதானி ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் மூன்றாவது இடத்தில் இருந்து 21 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், அதானி குழுமத்துடனான வணிகத் தொடர்புகளை விலக்கிக் கொள்ளும் நிலைக்குக் உலக நிறுவனங்கள் பல தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ரோஸ் டே: சொல்லப்படும் காரணங்கள், ‘கிரிஞ்ச்’ என்ற கொல்லி… அனைத்தையும் மீறி பூக்கும் காதல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....