Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஓய்வு பெற்றார் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்!

    ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்!

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிரபல வீரர் ஆரோன் பிஞ்ச் அனைத்துவிதமான சர்வேத போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

    ஆஸ்திரேலியா அணி 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற போதும், 2021 ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்ற போதும் அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் இடம்பெற்றிருந்தார். 

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்திருக்கிறார் ஆரோன் பிஞ்ச். ஏற்கனவே ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஆரோன் பிஞ்ச் தற்போது இருபது ஓவர் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    மேலும், இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில், “அடுத்த டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாட மாட்டேன் என்பதை உணர்ந்து, எனது இடத்தை நிரப்புவதற்கு அணிக்கு போதிய காலம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போதே விடைபெறுகிறேன். 12 ஆண்டுகளாக அணிக்காக ரத்தம் சிந்தி விளையாடி உழைத்ததற்காக பெருமைப்படுகிறேன். இப்போது நான் நல்ல இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

    ஆரோன் பிஞ்ச், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 278 ரன்னும், 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5,406 ரன்னும், 103 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 3,120 ரன்னும் அடித்துள்ளார். சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் ( 172 ரன்) அடித்தவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் பின்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

    துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் என அச்சம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....