நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் 2,316 பேர், சிரியாவில் 1,300 பேர் என மொத்தம் 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவாகியுள்ளது. கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், சரியாக நேற்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
மேலும், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைக்கின்றன.
இதுவரையில், துருக்கியில் 2,316 பேர், சிரியாவில் 1,300 பேர் என மொத்தம் 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 10,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
இச்சூழலில், துருக்கியில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது- முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன்