Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 59 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. பிப்ரவரி 4 ஆம் தேதி வரை 5 நாட்களில் மட்டும் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்றுடன் மொத்தம் 59 பேர் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். 

    இதைத்தொடர்ந்து நாளை 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறும். அதைத்தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது- முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....