Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்ஏழாயிரத்தை தாண்டிய யூபிஐ பணப்பரிவர்த்தனை.. வெளிவந்த ரிப்போர்ட்

    ஏழாயிரத்தை தாண்டிய யூபிஐ பணப்பரிவர்த்தனை.. வெளிவந்த ரிப்போர்ட்

    2022ஆம் ஆண்டு யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாக உள்ளது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். சிறு தொகையில் ஆரம்பித்து பெரும் தொகை வரையில் இந்த பரிவர்த்தனை முறைதான் அதிகளவில் உபயோகிக்கப்படுகிறது. 

    இதற்கு உதவும் செயலிகளான கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற யுபிஐ செயலிகள் அதிகளவில் உபயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.

    இந்திய தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஐ பரிவர்த்தனை 700 கோடியை தாண்டியது அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறை.

    ஒட்டுமொத்தமாக, 2022ஆம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது.

    2021ஆம் ஆண்டு மொத்த பரிவர்த்தனை 3,800 கோடியாகவும், பரிவர்த்தனை தொகை ரூ.72 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுதல் ; 1040 பேர் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....