Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு : எகிறப்போகும் புதிய ரீல்ஸ்கள்

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு : எகிறப்போகும் புதிய ரீல்ஸ்கள்

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் #1MINMUSIC என்ற திட்டத்தை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கலைஞர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள கிரியேட்டர்களை வைத்து புதிய இசைசார்ந்த வீடியோக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இன்ஸ்டாகிராம் நிறுவனம் இசைகளை நினைவுகூர்ந்து புதிய ரீல்ஸ் வகை காணொளிகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது. 

    இந்த திட்டத்தின் முதல் தொடக்கமாக மிகவும் பிரபலமான கலைஞர்களை வைத்து காணொளிகளை உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் தொடக்கமாக இந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமையான குருகிராமில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அங்கு கலைஞர்களுக்கு தேவையான கேமரா, ஒளிப்பதிவாளர்கள், அமைப்பு போன்ற உதவிகள் செய்து தரப்படும். 

    இந்த புதிய தொடரின் முதல் பாப்-அப் வெளிவரவிருக்கும் பாலிவுட் திரைப்படமான ஜக் ஜக் ஜியோவின் நடிகர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் நடிகர்கள் வருண் தவான், கியாரா அத்வானி மற்றும் அணில் கபூர் இதில் அடங்குவர். இந்த ஒருநிமிட வீடியோக்கள் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தையும், ரசிக்கும் படியாகவும் இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இசை வீடியோக்களை உருவாக்கப்போகும் கலைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கண்டறியப்பட்டவர்கள் என்று மெட்டா நிறுவனத்தின் கருத்து மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் இயக்குனரான பரஸ் ஷர்மா தெரிவித்துள்ளார். 

    இவ்வாறாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ன் ஒரு அங்கமாக வரவிருக்கும் இந்த #1MINMUSIC திட்டம் கடந்த மே மாதத்தின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது. இந்த திட்டத்தில், தவானி பானுசாலி, நீதி மோகன், ஷான், ஹிமான்ஷி குரானா, அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் பங்கேற்க உள்ளனர். இதன்மூலம் புதிய வேகத்துடன் வீடியோக்கள் உருவாக்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

    சமீபகாலங்களில், இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் இளம் சமுகத்தினரிடையே  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இது மேலும் இளைஞர்களைச்  சென்றடைய வழிவகுக்கும்.

    குழந்தையின் தலையை துண்டித்து தாயின் வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்த குரூரம்..

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....