Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்குழந்தையின் தலையை துண்டித்து தாயின் வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்த குரூரம்..

    குழந்தையின் தலையை துண்டித்து தாயின் வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்த குரூரம்..

    பாகிஸ்தான் நாட்டில் உள்ள தார்பார்கர் பகுதியில் வசித்து வந்த 32 வயது கர்பிணி பெண்ணிற்குப் பிறந்த குழந்தையின் தலையினை துண்டித்து அவரின் வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசவ வலி ஏற்பட்டதினையடுத்து சிந்து மாகாணத்தின் சக்ரோவிலுள்ள கிராமப்புற சுகாதாரமையத்திற்கு சென்றுள்ளார் அப்பெண். அங்கு பெண் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், அனுபவமற்ற மருத்துவ ஊழியர்கள் பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

    மருத்துவ ஊழியர்களின் அலட்சியப்போக்கினால் குழந்தையின் தலையானது எதிர்பாரா விதமாக துண்டிக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட தலையினை அந்த பெண்ணின் வயிற்றினுள்ளேயே வைத்து தைத்தும் உள்ளனர்.

    இதனால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த பெண்னினை அருகில் இருந்த மிதியா மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போதுமான உபகரணங்கள் அங்கு இல்லை என்று கூறியதையடுத்து, லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    குழந்தையின் உடல் பகுதிகளை லியாகத் பல்கலைக்கழக மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். எனினும் குழந்தையின் தலையானது பெண்ணின் வயிற்றுக்குள் சிக்கிக்கொண்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றுப்பகுதியினை திறந்து தலையினை வெளியில் எடுத்துள்ளனர்.

    உடனடியாக மருத்துவர்கள் செயல்பட்டதால் அப்பெண்ணின் உயிரானது காப்பாற்றப்பட்டது. பரபரப்பான இந்த சம்பவத்தினை விசாரிக்க சிந்து சுகாதாரத்துறை இயக்குனர் ஜெனரல் டாக்டர் ஜூமான் பகோடோ உத்தரவிட்டுள்ளார்.

    சக்ரோவில் உள்ள ஆரம்ப சுகாதாரமையத்தில் பெண் மகப்பேறு மருத்துவர் இல்லாதது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் அந்த பெண்ணினை சிலர் தங்களது செல்போன் கொண்டு விடியோவும் எடுத்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்களை பல வாட்சப் குழுக்களிலும் பகிர்ந்துள்னர். இது குறித்தும் விசாரிக்க உத்தரவு போடப்பட்டுள்ளது.

    பெண்களை அதிகமாக பாதிக்கும் வெள்ளைப்படுதல்… தடுக்க என்ன செய்ய வேண்டும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....