Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்17 ஆண்டுகால தொடர் தேடல் : சிக்கியது உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன்!

    17 ஆண்டுகால தொடர் தேடல் : சிக்கியது உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன்!

    17 வருட தேடல்களுக்குப்பின் செப் ஹோகன் என்ற உயிரியலாளர், உலகின் மிகப்பெரிய நன்னீர் மீனைக் கண்டுபிடித்திருக்கிறார். செப் ஹோகன் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மீன்  யூரோஜிம்னஸ் பாலிலேபிஸ் எனப்படும் நன்னீர்வாழ் திருக்கை மீன் ஆகும். 

    கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றின் இருண்ட நீரில் இருந்து பிடிக்கப்பட்ட அந்த திருக்கை மீனின் நீளம் 13 அடி ஆகும். அந்த மிகப்பெரிய பூததிருக்கையை அளந்தபின் மீண்டும் ஆற்றுக்குள்ளேயே விட்டு விட்டனர் அந்த மீனைப் பிடித்தவர்கள். இதனுடைய மொத்த எடை 661 பவுண்டுகள் ஆகும், இது 2005 ஆம் ஆண்டு தாய்லாந்தில் பிடிபட்ட கெளுத்தி மீனைவிட 15 பவுண்டுகள் அதிக எடை கொண்டது. அந்த மீன்தான் இதுவரை பிடிபட்டத்திலேயே மிகப்பெரிய மீன் என ஆய்வாளர் செப் ஹோகனே முன்பு தெரிவித்து இருந்தார்.

    புதுவகை இந்த அளவிலான நன்னீர் திருக்கை மீன்கள் மிகப்பெரிய அளவிலான நச்சு முட்டைகளைக் கொண்டவை. அவற்றின் நீளமே குறைந்தது 1 அடி இருக்கும். இவை குறைந்த விலையில் கிடைக்கும் புரத ஆதாரங்களாக இருப்பதால், சந்தையில் நல்ல விலையில் வாங்கப்படுகின்றன. மீகாங் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக உயிரியலாளர் செப் ஹோகன் மற்றும் அவரது குழுவினரை அப்பகுதி மீனவர்கள் கடுமையாக எச்சரித்து இருந்தனர். 

    இந்த திட்டம், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பன்முக நீர்த்தன்மையை பாதுகாக்கும் மற்றும் சர்வதேச வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் நிதியுதவி செய்யப்பட்ட திட்டம் ஆகும். உள்ளூர் மீனவர்களின் கடுமையான எதிர்ப்புடன் தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் தான், இந்த மிகப்பெரிய திருக்கை கண்டுபிடிக்கப்பட்டுளது. 

    முதலில் ஆராய்ச்சிக்குழுவினர் ஹோ ப்ரெஹ்  எனப்படும் சிறிய ஆறு ஓடும் தீவுக்கு விரைந்தனர். பின்பு பெரிய அளவிலான மூன்று தொழில்முறை தராசுகளை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். பின்பு தார்பாய் கொண்டு அந்த திருக்கை மீனைப் பிடித்து பின்பு எடையிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு 400 பவுண்டு எடை கொண்ட திருக்கை ஒன்று அருகில் உள்ள ஆற்றில் பிடிக்கப்பட்ட நிலையில் இந்த ராட்சத திருக்கை சிக்கியுள்ளது. அது அந்த குழுவினருக்கு இந்த ஆண்டின் மகத்தான கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது. 

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உயிரியலாளர் செப் ஹோகன், உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன் மீகாங் நதியில் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த மீகாங் நதிக்கரை பகுதி அதிக மக்கள்தொகை கொண்டது, அதனால் இந்த நதி அதிகளவு மீன்பிடித்தலால் பாதிக்கபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    குழந்தையின் தலையை துண்டித்து தாயின் வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்த குரூரம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....