Monday, March 18, 2024
மேலும்
  Homeஆன்மிகம்குழந்தை வரம் அருளும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!

  குழந்தை வரம் அருளும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!

  குழந்தைகளின் கொஞ்சல் மொழியை கேட்காதவர்கள் தான், குழலின் ஓசையும், யாழின் இசையும் இனிமையானது என்று கூறுவார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு.

  குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

  மழலைச்சொல் கேளா தவர்

  ஆக, குழலையும், யாழையும் விட இனிமையான மொழியை கேட்க வேண்டும் என்றால், அவர்களுக்கு பிள்ளைச் செல்வம் வேண்டும்.

  குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீடு எப்படி மாறுதலும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்பது அதை உணர்ந்தவர்களுக்கு தெரியும். அது ஒருபுறமிருக்கப் பல தம்பதியர் தங்களுக்கு என ஒரு குழந்தை இல்லையே என ஏக்கத்துடன் இறைவனை வேண்டி வருபவர்களும் உண்டு.

  குழந்தை செல்வம் இல்லை என்றால், அவர்களின் பிறவிப் பயன் கிட்டுவதில்லை என்பார்கள். திருமணமான தம்பதியர் தங்களுக்கு நெருக்கம் தொடங்கியதும் ஒரு வாரிசை, பிள்ளை கனி அமுதிற்காக எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையானதே. அந்த கனவு நினைவாகி பிள்ளையை தங்களின் கையில் அள்ளி எடுக்கும் போது தாய், தந்தையர் அடையும் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

  ஆனால், திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை என்று கருதுபவர்கள், இரண்டு மந்திரங்களை உச்சரித்தால், குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பூர்வ புண்ணியம் இருந்தால்தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். ஆனாலும், இரண்டு விதமாக இருக்கும் சந்தான கோபால மந்திரத்தை உச்சரித்தால், குழந்தை பேறு உண்டாகும் என்று கூறுகிறது ஆன்மிகம்.

  இந்த மந்திரத்தை ஜெபிக்க தொடங்குவதற்கு முன் தம்பதிகள் அவர்களின் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து 5ஆம் பாவம், 9ஆம் பாவத்தின் நிலையை பரிசீலித்து அதற்கேற்ப மந்திரத்தை ஜெபிப்பது இன்னும் சிறப்பு.

  சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.

  முதல் மந்திரம்

  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்

  தேவகி ஸுத கோவிந்தா வாசுதேவ ஜகத்பதே

  தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத

  பொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.

  இரண்டாவது மந்திரம்

  தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

  தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்

  பொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!

  இந்த மந்திரங்களை முறைப்படி உபதேசம் பெற்று பகவான் கிருஷ்ணரை நினைத்து வழிபட வேண்டும். மேலும், தேன், நெய், கற்கண்டு ஆகிய திரிமதுர திரவியத்தால், 10,000 முறை ஹோமம் செய்து, ஒரு லட்சம் முறை மந்திரத்தை உச்சரித்தால் குழந்தைப் பேறு உண்டாகும்.

  இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு : எகிறப்போகும் புதிய ரீல்ஸ்கள்

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....