Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்இறந்துபோன வளர்ப்புநாயினை மீண்டும் உயிர்பெறவைத்து சாதனை : வலுப்பெறும் குளோனிங் டெக்னாலஜி

    இறந்துபோன வளர்ப்புநாயினை மீண்டும் உயிர்பெறவைத்து சாதனை : வலுப்பெறும் குளோனிங் டெக்னாலஜி

    டொரோண்டோ நகரத்தில் வசிக்கும் நிபுணரான போனி டாம், தன்னுடைய சமோய்ட் வகை நாய் மென்லிக்கு வயது முதிர்வதைக் கண்டு, வரப்போகும் இழப்பு தனக்கு தாங்கமுடியாததாய் அமையும் என்று உணர்கிறார். தன்னுடைய வளர்ப்பு நாய் மென்லிக்கு 12 வயது ஆகும் போது வேலைகளைத் தொடங்கி, இன்று வளர்ப்புப்பிராணிகளைக் குளோன்களாக தயாரிக்கும் வயா-ஜென் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். நான் 2017 ஆம் ஆண்டு மரபியல் பொருட்களை இன்சூரன்ஸ் பாலிசிக்காக வாங்கினேன் என்று கூறியுள்ளார். 

    தன்னுடைய வளர்ப்புநாய் மென்லி தன்னுடைய 16வது வயதில் மரணமடைந்த போது, குளோன்களை தயாரிக்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு பின்பு மென்லியின் மரபணு கொண்டு உருவாக்கப்பட்ட குட்டிநாய் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்குட்டிக்கு மேவரிக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்குட்டி மென்லி நாய் போல இல்லை என்று கூறப்பட்டாலும், போனி டாம் மேவரிக் நாய்க்குட்டியிடம் மென்லியின் குணாதிசயங்கள் தென்படுவதாக நம்புகிறார். 

    இந்த விடயத்தில் போனி டாம்கு உதவி செய்த வயா-ஜென் நிறுவனம் ஒரு சிறிய திசு பயாப்ஸி மூலம் நாய்க்குட்டிக்கு நினைவுகளை கொண்டுவர உதவியுள்ளது. இந்த நிறுவனம் உயிரினங்களின் திசுக்களை வைத்து புதிய குளோன்களை உருவாக்குகிறது.

    நாய்களை குளோன்களாக மாற்ற இந்த நிறுவனம், 50000 டாலர்களை கட்டணமாக வசூலிக்கிறது. மேலும், செல்லப்பிராணிகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் திசுக்களை பாடம் செய்து பாதுகாக்க 2000 டாலர்களை கட்டணமாக வசூல் செய்கிறது இந்த நிறுவனம். இது அனைவராலும் செலுத்த கூடிய பணம்தான் என்றும் கூறப்படுகிறது. 

    அனைத்தையும் தாண்டி இந்த நடைமுறையில் பலவித சிக்கல்களை எதிர்கொண்டதாக அந்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதற்காக செல்லப்பிராணிகள் உயிருடன் இருக்கும் போதே, அவற்றின் தோலில் இருந்து திசுக்கள் சேகரிக்கப்பட வேண்டும். மேலும், பலநேரங்களில் இது சாத்தியமான விடயமாக அமைவது கிடையாது. பலநாடுகளில் இதை விதிமுறைக்கு புறம்பானதாக கருதுகிறார்கள், குறிப்பாக யுனைடெட் கிங்டம் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள் உயிரினங்கள் உயிருடன் இருப்பதை தவறாக கருதுகிறார்கள். 

    எவ்வளவு கடினங்கள் இருந்தாலும், இவ்வாறான சம்பவங்கள் குளோனிங் முறைகள் பின்வரும் காலங்களில் ரொம்ப பரவலாக பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    குழந்தை வரம் அருளும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....