Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இபிஎஸ் - ஓபிஎஸ் அதிர்ச்சி!

    பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இபிஎஸ் – ஓபிஎஸ் அதிர்ச்சி!

    அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரைக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மாவட்டச் செயலாளர்களில் இரண்டு பேர் இன்றைக்கு எடப்பாடி பக்கம் போய் இருக்கிறார்கள். இதனால் ஓ.பன்னீர் செல்வத்தின் பலம் குறைந்திருக்கிறது. ஆதரவாக இருந்த 12 மாவட்ட செயலாளர்களில் இரண்டு பேர் அணி தாவி விட்டதால் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 10 ஆக குறைந்திருக்கிறது.

    மேலும், அதிமுகவில் நீயா நானா என்கிற போட்டி இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரது வீட்டிலும் ஆதரவாளர்கள் கூடி அவரவர் பலத்தை நிரூபித்து வருகின்றனர். அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களின் 60 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஓ.பன்னீர்செல்வத்திற்கு 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வரைக்கும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும், விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரனும் திடீரென்று இன்றைக்கு எடப்பாடி பக்கம் தாவி இருக்கிறார்கள். இரண்டும் மா.செக்கள் திடீரென்று அனிதாவியதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருந்த 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தற்போது 10 ஆக குறைந்திருக்கிறது. தேனி மாவட்ட செயலாளர் செய்யது கான், சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன் , கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

    மேலும் 23-ம் தேதி கூடவுள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பை மீறி ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்றே இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இறந்துபோன வளர்ப்புநாயினை மீண்டும் உயிர்பெறவைத்து சாதனை : வலுப்பெறும் குளோனிங் டெக்னாலஜி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....