Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்தமிழ்நாடுதினசரி 4,000 டன் கழிவுகளை சுமக்கும் பெருங்குடி குப்பைக்கிடங்கு; அவதியில் மக்கள்!

  தினசரி 4,000 டன் கழிவுகளை சுமக்கும் பெருங்குடி குப்பைக்கிடங்கு; அவதியில் மக்கள்!

  தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அன்றாட கழிவுகள் கொட்டப்படும் பெருங்குடி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதும், மாசுபாட்டால் பெருங்குடி அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உள்ள நீர்நிலைகள் ‘ரோஸ்’ நிறமாக மாறும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

  கடந்த 40 ஆண்டுகளாக சென்னை மாநகரத்தின் குப்பைகளை சுமந்து நிற்கும் பெருங்குடி குப்பைக்கிடங்குக்கு அருகில் வசிக்கும் பலரும் சுவாசக்கோளாறு காரணமாக நிரந்தரமாக நோயாளியாக மாறிவிட்டதாக கலங்குகின்றனர்.

  தினமும் சுமார் 4,000 டன் கழிவுகள் பெருங்குடி குப்பைக்கிடங்குக்கு கொண்டுவரப்படுகிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கலந்து கொட்டப்படுவதால், குப்பைக்கிடங்களில் சேர்ந்துள்ள குப்பை மேடுகளில் அவ்வப்போது தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும். இந்த ஆண்டு தீ விபத்தோடு, பள்ளிக்கரணை நீர்நிலையில் இரண்டு முறை தண்ணீர் நிறம் மாறிய சம்பவங்களும் நடந்துள்ளதால், அச்சத்தில் இருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

  1970ல் பெருங்குடி அருகே சீவரம் கிராமத்தில் ஏழு ஹெக்டர் பரப்பளவில் முதலில் குப்பைக்கிடங்கு அமைந்தது. அது படிப்படியாக விரிவடைந்து, சட்டத்திற்கு புறம்பாக, 136 ஹெக்டராக 2007ல் மாறிவிட்டது. தற்போது அதன் பரப்பளவு சுமார் 300 ஹெக்டரை தாண்டியுள்ளது என்கிறார் எழுத்தாளர் பாக்கியம். பெருங்குடி குப்பைக்கிடங்கு எவ்வாறு நிலம், நீர் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது என விரிவாக ஆராய்ந்து ‘வளர்ச்சியின் பெயரால் வன்முறை’ என்ற நூலில் பாக்கியம் எழுதியுள்ளார்.

  இதனை தொடர்ந்து பேசிய அவர் : 

  ”பெருங்குடியில் சமீபத்தில் தீ பற்றி எரிந்தது. அந்த தனலால் சுமார் ஆறு கிலோமீட்டர் வரை வெப்பமும் புகையும் பரவியது. இருள் படிந்ததுபோல் பெருங்குடி காட்சியளித்தது. இந்த புகைமூட்டமும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தண்ணீர் ரோஸ் நிறத்தில் மாறியாதையும் சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்தார்கள். கண்ணுக்குத் தெரியாமல் மோசமான பாதிப்புகளை பெருங்குடி சந்தித்துக்கொண்டு இருக்கிறது. அங்கு கொட்டப்படும் கழிவுநீரும், மருத்துவக் கழிவுகளும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்,” என்கிறார் பாக்கியம். அதேபோல, பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணம் ஒவ்வொரு ஆட்சியிலும் குப்பைக்கிடங்கை சரிசெய்வதற்காக செலவாகிக்கொண்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

  ஆசையாக கனவு இல்லத்தைக் கட்டிய பலரும் கடனில் தத்தளித்துக் கொண்டும் தீராத உடல்நல பாதிப்புகளுடனும் போராடி வருவதாக சொல்கிறார்கள். பெருங்குடியில் உள்ள சாய் நகர் குடியிருப்புவாசிகள் நல சங்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் பேசுகையில், சென்னை நகரத்தில் தங்களின் சொந்த நிலத்தில் அகதியாய் வாழ்வதாக தெரிவித்தார்.

  ”நாங்கள் அனைவரும் சுற்றுச்சூழல் மாசுபட்டால், எங்கள் சொந்த நிலத்தில், நாங்கள் ஆசையாக வாங்கிய நிலத்தில் அகதியாக வாழ்கிறோம். பலமுறை போராட்டங்கள் நடத்திவிட்டோம். சட்டங்களை இயற்றும் அரசாங்கமே சட்டங்களை மீறினால் யாரிடம் முறையிடுவது? எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் பலருக்கும் சுவாச பிரச்னைகள் உள்ளது. ஒருசில ஆஸ்துமா நோயாளிகள் பாதிப்பு அதிகமாகும்போது, உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,” என்கிறார்.

  வீடு வாங்கியவர்கள் ஒரு சிலர், குறைந்த விலைக்கு கட்டிய வீடுகளை விற்றுவிட்டார்கள் என்றும் ஒரு சிலர் குறைந்த வாடகை என்பதால் குப்பை கிடங்குக்கு அருகில் வசிக்கும் நடைமுறையும் பெருங்குடியில் உள்ளது என்கிறார் பார்த்திபன். இங்குள்ள காற்று மோசமான தரத்தில் உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை எதிர்காலத்தில் சந்திப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை, நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவாசிக்கும் காற்று, குடிநீர் என எல்லா மாசுபாடுகளையும் எதிர்கொள்வதில், இங்குள்ள பலருக்கும் அடிக்கடி உடல் ரீதியான பாதிப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது,” என்கிறார் பார்த்திபன்.

  இதுகுறித்து பேசியுள்ள சென்னை மேயர் பிரியா ராஜன் “பெருங்குடி குப்பைக்கிடங்கில் ‘பயோமைனிங்’ என்ற குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்றும் வேலைகள் நடந்து வருவதாக கூறும் மேயர், காற்று மாசுபாடு அதிகரிக்கும் நேரத்தில் மருத்துவ முகாம்கள் செயல்படுவதாக தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெருங்குடி அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா மேலும் வளப்படுத்தப்பட்டு, குப்பைக்கிடங்கால் ஏற்படும் மாசுபாடு குறைக்கப்படும் என்கிறார் பிரியா ராஜன்.

  இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு : எகிறப்போகும் புதிய ரீல்ஸ்கள்

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....