Tuesday, May 16, 2023
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்கருப்பை ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று தெரியுமா?

  கருப்பை ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று தெரியுமா?

  தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை. இதற்கு மிகவும் உதவுவது கருப்பை ஆகும்.

  கருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். இது தான் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பையே உருவாக்குகிறது. இது தான் அடுத்த சந்ததிக்கான அஸ்திவாரமாக செயல்படுகிறது.

  எனவே பெண்கள் தங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

  உளுந்து:

  கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சிக்குப் பெண்களுக்கு இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் மூலிகைகளில் உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.

  உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென்னிந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுந்துக் கஞ்சியை வைத்திருந்தார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது பலனளிக்கும்.

  க்ரீன் டீ :

  க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஆரோக்கியமான கருப்பைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் கருப்பை நார்த்திசுக் கட்டிகளை களையவும் உதவுகிறது. பெண்கள் 8 வாரங்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வந்தால் கருப்பை நார்த்திசுக் கட்டிகளை குறைத்து விடலாம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  வாழைப்பூ:

  வாழைப்பூ கர்ப்பப்பைக்கு சிறந்த ஆரோக்கியம் தரும் என்பது தெரியும். துவர்ப்பு நிறைந்த வாழைப்பூவை வாரம் ஒருமுறை சாறாக்கியோ, கூட்டாக்கியோ சாப்பிடவேண்டும். குறிப்பாக பூப்படைந்த பெண்கள் கருத்தரிக்கும் காலம் வரை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

  இதனால் பெண்கள் மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு உள்ளாவது தடுக்கப்படும். இந்த பூவை சுத்தம் செய்யும் போது இறுதியாக பூவின் அடித்தண்டை அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் இவை பன்மடங்கு கர்ப்பபைக்கு பலமாக இருக்கும். அதனால் இனி வாழைப்பூவை அவசியம் சேருங்கள். குறிப்பாக இளம்பெண்கள்.

  ஆலம் விழுது பால் கசாயம்:

  செய்முறை:

  ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக காலை மாலை இரு வேளையும் அருந்தலாம் (காபி, டீக்குப் பதிலாக).

  பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் சாப்பிடவும்.

  வெந்தயம்:

  வெந்தயத்தை பொடித்து மாதவிடாய் நாட்களுக்கு முன்பு சாப்பிடுவதன் மூலம் வயிறு வலி குறையும். அதேபோன்று வெந்தயத்துடன் இரண்டு பங்கு அளவு வரகு அரிசி கலந்து வேகவைத்து, கஞ்சியாக்கி, உப்பு சேர்த்து குடித்தால் கர்ப்பப்பை வலுவாக இருக்கும். மாதம் ஒருமுறை இந்த கஞ்சியை குடித்துவருவதன் மூலம் கர்ப்பப்பை கோளாறுகளை நிச்சயம் தடுக்கமுடியும்.

  குளிர்ந்த நீரில் வாழும் மீன்கள் கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற குளிர்ந்த நீரில் வாழும் மீன்களில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெண் உடம்பில் உள்ள புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் தான் கருப்பையை வேகமாக சுருங்கி விரிய வைக்கும். இப்படி வேகமாக சுருங்கி விரியும் போது கருப்பை தவறாக மாறக் கூடும்.

  மேற்கண்ட உணவுகள் உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே உங்கள் உணவுப் பழக்கத்தில் இது போன்ற உணவுகளை சேர்த்து ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.

  இது திராவிட மாடல் அரசு அல்ல! ராஜபக்சே மாடல் அரசு! – ராம. ரவிக்குமார்

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....