Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇரு போட்டி; இரு தீர்ப்பு - நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்தது என்ன?

    இரு போட்டி; இரு தீர்ப்பு – நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்தது என்ன?

    விடுமுறை தினமான நேற்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது, இரண்டாவதுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

    சென்னை vs குஜராத்..

    முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி கொடுக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ருத்ராஜ் கெய்கவாட் 49 பந்துகளுக்கு 53 ரன்கள் அடித்தார். மெயின் அலி 17 பந்துகளில் 21 ரன்களும், நாராயண் ஜெகதீசன் 33 பந்துகளுக்கு 39 ரன்களும் அடித்தனர்.

    ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பௌண்டரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், விக்கெட்டுகள் இருந்த போதிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முயற்சிக்காததாலும் அணியின் ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்ட அளவினை விட மிகக் குறைவாகவே இருந்தது.

    குஜராத் அணித்தரப்பில் முகமத் ஷமி 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான், அல்சாரி ஜோசப் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்திருந்தனர்.

    135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வ்ரிதிமான் சாஹா 57 பந்துகளில் 67 ரன்களை அடித்து வெற்றியினை நோக்கி அணியினை அழைத்துச் சென்றார். 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

    சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சாஹா ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 20 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. மூன்று வெற்றிகளுடன் சென்னை 9வது இடத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் vs லக்னோ..

    நேற்றைய ஐபிஎல்-லின் இரண்டாவது ஆட்டமானது மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கினைத் தேர்ந்தெடுத்தது. யாஷ்வி ஜெய்ஸ்வால் 29 பந்துகளுக்கு 41 ரன்களும், சஞ்சு சாம்சன் 24 பந்துகளுக்கு 32 ரன்களும், படிக்கல் 18 பந்துகளுக்கு 39 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். அணியிலுள்ள மற்ற பேட்ஸ்மேன்களும் தங்களது பங்கினை அளிக்க, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 

    லக்னோ தரப்பில் ரவி பிஷ்ணோய் 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர், ஆவேஷ் கான், ஆயுஷ் படோனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்திருந்தனர்.

    பின்னர் ஆடிய லக்னோ அணியில் தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன்களும், குர்னால் பாண்டியா 23 பந்துகளில் 25 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 17 பந்துகளில் 27 ரன்கள் அடித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்டினை இழந்து 154 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

    ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, ஓபேத் மெக்காய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், சஹால், அஸ்வின் ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் எடுத்திருந்தனர். 

    9 பந்துகளில் 19 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்ததற்காக ட்ரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், லக்னோ அணியும் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

    இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

    அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்திற்கான டைட்டில் இதுவா? புகைப்படத்திற்கு பின் உள்ள கதை இதுதானா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....