Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்திற்கான டைட்டில் இதுவா? புகைப்படத்திற்கு பின் உள்ள கதை இதுதானா?

    அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்திற்கான டைட்டில் இதுவா? புகைப்படத்திற்கு பின் உள்ள கதை இதுதானா?

    அஜித்குமார் அவர்கள் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே-61 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை மறைந்த கதாநாயகியான ஶ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 

    இதற்கு முன்னமே, அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை போனி கபூர் தயாரித்திருந்தார். 

    ஏகே-61 குறித்து அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து, திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு கதைகள் யூகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், யூகிக்கப்படுவதைப் போல ஏகே-61 இருக்காது என்கிறது, படக்குழு தரப்பு. இத்திரைப்படத்தில் அஜித்குமார் அவர்கள் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடிப்பது மட்டும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. 

    ஏகே-61 திரைப்படத்தின் படப்படிப்பு ஹைதராபாத்தில் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏகே-61 திரைப்படத்தில், மஞ்சு வாரியர், ராஜதந்திரம் மற்றும் நடுநிசி நாய்கள் திரைப்படத்தில் நடித்த ‘வீரா’, சார்பட்டரை திரைப்படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கேன் ஆகியோர் நடித்திருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளிவந்திருந்தது. தற்சமயம், சமுத்திரக்கனி அவர்களும் ஏகே-61 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

    சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கருத்துகள் சூழ்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் வில்லனாக நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    சமீபத்தில், அஜித்குமார் அவர்களுடன் நடிகர் ஆதி அவர்கள் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தினால் ஆதியும் ஏகே-61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாரோ என்ற கேள்விகள் இணையத்தை சூழ்ந்தது.

    கள நிலவரம் என்னவெனில், ஏகே-61 திரைப்படத்தின் படப்படிப்பு நடைபெற்று வரும் பகுதியில்தான், ஆதி வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு திரைப்படத்தின் படப்படிப்பும் நடைபெற்று வருகிறது. ஆதலால், அஜித்குமார் அவர்களை ஆதி சந்திக்க சென்றார். அச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இணையத்தில் வைரலானது.

    மேலும், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோரின் திருமணம் வரவிருக்கும் 18 ஆம் தேதி நடைபெற இருப்பதால், அதற்கான அழைப்பிதழை ஆதி தந்துவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

    ஏகே-61 திரைப்படத்திற்கு வீரா என்ற தலைப்பை பரீசிலனை செய்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. வீரா என்ற தலைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படம் ஒன்று இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

    எது எப்படியாக இருப்பினும், ஏகே-61 திரைப்படத்தின் படப்படிப்பு விரைவாக முடிவடைந்து தீபாவளிக்கு திரைப்படம் திரைக்கு வந்தால் வலிமையான கொண்டாட்டங்கள் இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்!

    61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்…….?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....