Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅமிர்தசரஸிலுள்ள குரு நானக் மருத்துவமனையில் தீ விபத்து!!

    அமிர்தசரஸிலுள்ள குரு நானக் மருத்துவமனையில் தீ விபத்து!!

    அமிர்தசரஸிலுள்ள குரு நானக் மருத்துவமனையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு அருகிலுள்ள புற நோயாளிகளின் கட்டிடத்தில் வெடி விபத்தின் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தீ அருகிலுள்ள தோல் மற்றும் இதயநோய் பிரிவு கட்டிடத்திற்கும் பரவியுள்ளதாய் கிடைக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. 

    புற நோயாளிகள் பிரிவுக்கு அருகில் இருந்த இரண்டு மின்மாற்றிகளினால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் ராஜிவ் குமார் தேவ்கன் கூறியுள்ளார். ஒவ்வொரு மின்மாற்றியிலும் ஒரு லிட்டர் அளவு எண்ணெய் இருந்ததாகவும், அதீத வெப்பத்தினால் அந்த எண்ணெய் தீப்பற்றியிருக்கக் கூடும் என்றும் கூறியுள்ளார்.

    பெரிய வெடி விபத்து நிகழ்ந்த போதிலும், எந்த விதமான உயிரிழப்பும், விபத்துக்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மருத்துவ அலுவலர்கள் நோயாளிகளை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று விட்டதினால் பெரும் ஆபத்து தவிர்க்கப் பட்டது.

    ஒரு மருத்துவமனையில் இவ்வளவு பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கப் போராடிவருகின்றனர்.

    ஜூலை முதல் மாதந்தோறும் 1000 ரூபாய் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேருமாம்! – அரசு அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....