Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்வெளிவர இருக்கிறது, கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்; விலை இவ்வளவா?

    வெளிவர இருக்கிறது, கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்; விலை இவ்வளவா?

    கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் கூகுள். கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தனது புதிய தயாரிப்புகளை குறித்து விளக்குவதற்கும், புதிய கேட்ஜெட்டுகளை அறிமுகம் செய்வதற்கும், நிகழ்கால தயாரிப்பு பணிகளை குறித்து விவாதிக்கவும் Google I/O நிகழ்வை நடத்திவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் காணொளி காட்சி வாயிலாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

    கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

    கூகுள் பிக்சல் 6a

    இந்நிலையில், சமீப காலமாக கூகுள், ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை கூகுள் பிக்சல், பிக்சல் 2, பிக்சல் 3, பிக்சல் 4, பிக்சல் 5, பிக்சல் 5a, உள்ளிட்ட மாடல்கள் வெளிவந்துள்ள நிலையில், கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Google I/O – நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவில் இந்த செல்போன் இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில், 449 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் 34 ஆயிரத்து 745 ரூபாய் ஆகும்.

    இந்த ஆண்டின் மிகப்பெரிய கூகுள் தயாரிப்பாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. பிக்சல் 6 சீரிஸின் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இது உள்ளது. மேலும், நிறுவனத்தின் பிரத்யேக டென்சார் சிப்செட் இதில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5 ஆண்டுகளுக்கான Android இயங்குதள அப்டேட்ஸ் கிடைக்கும் எனவும் கூகுள் உறுதி அளித்துள்ளது.

    ‘ஐபிஎல் வெறும் தொடக்கம்தான்..’ ; அசுர வேகத்திற்கு தயாராகும் உம்ரான் மாலிக் எனும் புயல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....