Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றதா நீர்மின் திட்டங்கள்?

    விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றதா நீர்மின் திட்டங்கள்?

    நீர்மின் திட்டங்கள் என்றால் என்ன ?

    இந்திய நாட்டின் மின்சக்தி உற்பத்தி, நீர் மின்சக்தியிலிருந்து கிடைத்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அனல் மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவற்றின் மூலம் பெருமளவில் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 19 மே 2018 அன்று கிசன்கங்கா நீர் மின் திட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய நீர் மின் திட்டங்கள்:

    இந்தியாவில் உள்ள முக்கிய நீர் மின் திட்டங்கள்: டாடா நீர் மின் திட்டம், பைகாரா நீர் மின் திட்டம், மேட்டூர் நீர் மின் திட்டம், பாபநாசம் நீர் மின் திட்டம், சிவ சமுத்திர நீர் மின் திட்டம், ஷாராவதி நீர் மின் திட்டம், பள்ளிவாசல் நீர் மின் திட்டம் மற்றும் மண்டி நீர் மின் திட்டம் ஆகும்.

    இவைத் தவிர இந்தியாவில் பக்ரா, கங்குவால், கோட்லா, காந்தி சாகர், இராணா பிரதாப் சாகர், ஜவகர் சாகர், ரீஹண்டு, ஓப்ரா உகை, கொய்னா, மச்கண்ட், மேல் சிலீனா, ஹிராகுட், பாலிமேலா, சிப்ளிமா, பெய்ராசியுல், சலால், பியாஸ், மானேரி-பாலி இராம கங்கா, ஸ்ரீ சைலம், கீழ் சிலீரு, காளி நதி, லோக்டாக் போன்ற பல நீர் மின் திட்டங்கள் உள்ளன.

    உலகம் முழுவதும் அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மீன் திட்டங்களால் பல உயிரினங்கள் பாதிப்படைந்து வருகின்றன. இந்த திட்டத்தினால் புலிகள் மற்றும் ஜாகுவார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து உள்ளதாக தற்போது ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து IUCN எனப்படும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் ஆசியாவில், உலகின் மீதமுள்ள புலிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் பாதித்து உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல், அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் அர்ஜென்டினா இடையே பரவியுள்ள ஜாகுவாரின் எண்ணிக்கையும் பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேஃஎப்சி பாணியில் சிக்கன்; இனி வீட்டிலேயே சுவையாக செய்யலாம் வாங்க!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....