Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இது திராவிட மாடல் அரசு அல்ல! ராஜபக்சே மாடல் அரசு! - ராம. ரவிக்குமார்

    இது திராவிட மாடல் அரசு அல்ல! ராஜபக்சே மாடல் அரசு! – ராம. ரவிக்குமார்

    தமிழகத்திலும் இலங்கையில் நடப்பதை போன்ற நிலை உருவாகலாம் என எச்சரித்திருக்கிறார் இந்து தமிழர் கட்சியின் மாநில நிறுவன தலைவர் ராம. ரவிக்குமார். 

    வேட சந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சியின் மாநில நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், இது திராவிட மாடல் அரசு அல்ல, ராஜபக்சே மாடல் அரசு என்றும், தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம் என்று கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், இலங்கையில் ராஜபக்சேக்களின் குடும்ப அரசியலால் பொருளாதார சீரழிவு உருவாகி இருக்கிறது என்றும், இதுபோன்ற சூழல் தமிழகத்திலும் உருவாகப் போகிறது என்று தெரிவித்துள்ளார். 

    மேலும், இந்து தமிழர் கட்சியின் மாநில நிறுவன தலைவர் ராம. ரவிக்குமார், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரை வைக்க முயற்சித்து வருகிறார்கள் அதனை எதிர்க்கிறோம் என்றும், அதேபோல் சென்னை ஓமந்தூரார் அரசு பலநோக்கு மருத்துவமனை வளாகத்தில், கருணாநிதியின் சிலை வைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்றும், இது ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கருணாநிதியின் பெயரை மாற்றி வைக்கும் முன் முயற்சியாகத்தான் நடைபெறுகிறது என்றும் இது முன் முயற்சியாக கூட இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    ஏற்கனவே, கிழக்கு கடற்கரை சாலைக்கு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதே சமயத்தில் மீண்டும்  திமுக அரசு திராவிட மாடல் என்று கருணாநிதியின் பெயரையும் சிலையும் முக்கியமான இடங்களில் வைக்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக கட்சியில் உட்கட்சி பூசல்களும் இருந்து வருகிறது. ஓராண்டுகளில் சில திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றினாலும் மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

    கேஃஎப்சி பாணியில் சிக்கன்; இனி வீட்டிலேயே சுவையாக செய்யலாம் வாங்க!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....