Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புகேஃஎப்சி பாணியில் சிக்கன்; இனி வீட்டிலேயே சுவையாக செய்யலாம் வாங்க!

    கேஃஎப்சி பாணியில் சிக்கன்; இனி வீட்டிலேயே சுவையாக செய்யலாம் வாங்க!

    கேஃஎப்சி சிக்கனை நாம் கடைகளில் சாப்பிட்டு இருப்போம். அதற்காக, மணி கணக்கில் காத்திருப்போம். ஆனால், அதை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாருங்கள். 

    தேவையானப் பொருட்கள்: 

    1. சிக்கன்- 1 கிலோ 
    2. மைதா- 1 கிலோ 
    3. மோர்- 1 கப் 
    4. முட்டை- 2
    5. மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி 
    6. மிளகுத்தூள்- 3 தேக்கரண்டி 
    7. பூண்டுத்தூள்- 3 தேக்கரண்டி 
    8. சோயா சாஸ்- 1 மேசைக்கரண்டி 
    9. உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை: 

    • ஒரு பாத்திரத்தில் காஷ்மீர் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பூண்டுத்தூள், சோயா சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில், ஒரு மேசைக்கரண்டி மோர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 
    • தோல் உடைய கோழி கால்களை வாங்குவது நல்ல சுவையைத் தரும். ஒரு மணி நேரம் உப்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த மசாலாவில் சிக்கனை எடுத்து முழுவதுமாக தடவி விட வேண்டும். பின்பு அதில், மோர் தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் வரை ஃபிரீசரில் வைக்க வேண்டும். 
    • நான்கு மணி நேரம் கழித்து எடுத்து, குளிர்ச்சி போக 10 முதல் 15 நிமிடம் அப்படியே விட வேண்டும். இப்படி செய்வதால் மசாலா நன்றாக ஊறி வரும். 
    • பின்பு ஒரு கிலோ மைதாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • மற்றொரு தனி பாத்திரத்தில், முட்டையின் வெள்ளையை மட்டும் எடுத்து அதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கலந்துக் கொள்ள வேண்டும். 
    • அதே போல் குளிர்ந்த நீர் ஒரு கப் அளவு தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • ஊறவைத்து எடுத்த சிக்கனை ஒவ்வொன்றாக, முதலில் மைதா மாவில் பிரட்டி எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். 
    • பின்பு ஒரு துண்டை முட்டை நீரில் விட்டெடுத்து, பின் மீண்டும் மைதா மாவில் கையால் கலந்து பிடித்து எடுக்க வேண்டும். 
    • பிறகு மீண்டும் குளிர்ந்த நீரில் நனைத்தெடுத்து, மைதா மாவில் பிரட்டி கையால் கொழுக்கட்டை பிடிப்பது போல் நன்கு அழுத்தி பிடித்து தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • இதேபோல், ஒவ்வொரு துண்டுகளையும் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • பின் ஒரு கடாயில், ஒரு லிட்டர் அளவு எண்ணெய் ஊற்றி, 100 டிகிரி செல்சியஸ் சூடேற்றி, அதில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகளாக 4 முதல் 6 நிமிடங்கள் வரை பொறித்து எடுக்க வேண்டும். 
    • சிக்கன் துண்டுகளை எண்ணெய்யில் விட்ட உடனே திருப்புவதை தவிர்க்க வேண்டும் 10 முதல் 15 நொடிகள் கழித்து திருப்பிவிட்டு வேக வைப்பது நல்லது. அதேபோல், அஜினோ மோட்டோ தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். 
    • அவ்வளவு தான்! கேஃஎப்சி ஸ்டைலில் சுவையான சிக்கன் தயார். 

    சிவபெருமானை வீட்டில் வழிபட இப்படியெல்லாம் செய்யுங்கள்; பலன்கள் குவியும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....