Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்இன்று மிக அருகில் வர இருக்கும் வியாழன், வெள்ளி கோள்கள்!

    இன்று மிக அருகில் வர இருக்கும் வியாழன், வெள்ளி கோள்கள்!

    வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு கோள்களும் வானத்தில் வெறும் 0.5 டிகிரி அளவு இடைவெளியில் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    சூரிய குடும்பத்தில் சூரியனை ஒவ்வொரு கோள்களும் அவற்றுக்கே உரித்தான கோணங்களில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றி வருகையில் சில கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கம். 

    அந்த வகையில் கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் வானத்தில் வியாழன், வெள்ளி மற்றும் நிலவு ஆகிற மூன்றும் நேர்க்கோட்டில் வந்து காட்சியளித்தது. இதனை பலரும் பார்த்து ரசித்தனர். 

    இதனைத்தொடர்ந்து, இன்று வானில், வெப்பமான கோளான வெள்ளியும், ராட்சத கோளான வியாழனும் மிக அருகில் வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு கோள்களும் வானத்தில் வெறும் 0.5 டிகிரி அளவு இடைவெளியில் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    இருப்பினும், உண்மையில் இரண்டு கோள்களுக்கும் இடையே மில்லியன் கணக்கான கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்கும். இந்த இரு கோள்களும் சூரியனை சுற்றி வருகையில் ஒரே நேர்க்கோட்டில் வருவதால், இரண்டு கோள்களும் அருகில் இருப்பது போன்று காண முடிகிறது. 

    இரண்டு கோள்களும் ஏற்கனவே இரவு வானத்தில் பிரகாசமாக காட்சியளிக்கும் நிலையில், இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் மிக அருகில் தோன்றும் அறிய நிகழ்வை உலக முழுவதும் உள்ள மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும். 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி; தடுமாறும் இந்திய அணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....