Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்அழிந்து வரும் அரியவகை கடல் பசுக்கள்; காரணம் என்ன?

    அழிந்து வரும் அரியவகை கடல் பசுக்கள்; காரணம் என்ன?

    பாலூட்டி வகையைச் சேர்ந்த கடல் பசுக்கள் அழிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடல் பசுக்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். இவற்றின் தலையும் முகமும் வட்ட வடிவில் காணப்படுவதோடு தாடை கீழ் நோக்கி இருக்கிறது. கடல் பசுக்கள் மென்மையான தோலினையும் மிக லேசான ரோமங்களையும் கொண்டுள்ளன. 

    நன்கு வளர்ந்த கடல் பசுக்கள் 10 அடி நீளமும் 250 முதல் 300 கிலோ எடையைக் உடையதாக காணப்படுகின்றன. கடலுக்கு அடியில் இருக்கும் நிலத்தடியில் வளரும் கடல் புற்களை இவை உணவுகளாக எடுத்துக்கொள்கின்றன. கடல் பசுக்களின் குட்டிகள் 3 அடி நீளம் கொண்டவையாக இருக்கின்றன.

    மேலும் இவை 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்டவையாக காணப்படுகின்றன. கடல் பசுக்கள் 6 முதல் 17 வயது வரை இனப்பெருக்கம் செய்கின்றன. பொதுவாக இந்தக் கடல் பசுக்கள் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை ஆகும். 

    இந்த கடல் பசுக்கள் உலக அளவில் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ள 30 நாடுகளின் கடற்பகுதிகளில் உயிர்வாழ்ந்து வருகின்றன. 

    இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாண கடற்பகுதியில் கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் கடல் பசுக்கள் பசியின் காரணமாக உயிரிழந்ததாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. அதே சமயம் புளோரிடா மாகாண கடற்பகுதியில் தற்போது 7 ஆயிரம் கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. கடல் பசுக்களின் இந்த திடீர் உயிரிழப்புக்கு, அவை உண்ணும் கடற்புற்கள் அழிந்து வருவதே காரணமாக சொல்லப்படுகிறது. 

    பொதுவாக கடலில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவைகளால் கடலுக்கு அடியில் வளரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன. இதனால் கடல் பசுக்கள் உண்ணுவதற்கு உண்ணவில்லாமல் இறந்துவிடுவதாக கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

    அரியவை வகை என்று சொல்லப்படும் டால்பின், திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒப்பாக சொல்லப்படும் இந்த கடல் பசு இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. 

    பீடா கடையில் சாக்லேட் போதைப்பொருள்; கையும் களவுமாக சிக்கிய நபர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....