Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புபாரம்பரிய உணவான கேழ்வரகு சந்திக் களியை, இப்படி சுலபமா செய்யலாம்!

    பாரம்பரிய உணவான கேழ்வரகு சந்திக் களியை, இப்படி சுலபமா செய்யலாம்!

    உகாதி அன்று செய்யப்படும் பாரம்பரிய உணவான சந்திக் களி செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம். 

    தேவையான பொருள்கள்: 

    1. கேழ்வரகு மாவு- ஒரு கப் 
    2. வெல்லம்- ஒரு கப் 
    3. வேர்க்கடலை பொடி- அரை கப் 
    4. எள்ளுப் பொடி- அரை கப்  
    5. துவரம் பருப்பு- கால் கப் 
    6. தண்ணீர், உப்பு- தேவையான அளவு

    செய்முறை: 

    • ஒரு பாத்திரத்தில், ஒரு கப் கேழ்வரகு மாவிற்கு ஏற்றவாறு 2 அல்லது இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். 
    • தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில், சிறிது உப்பு சேர்த்து கேழ்வரகு மாவினை ஒருபுறமாக சேர்க்க வேண்டும். இதனைக் கலந்துவிடக் கூடாது. மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வேக வைக்க வேண்டும். 
    • இந்த சமயத்தில் ஒரு கப் வெல்லத்திற்கு, அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு எந்தவித பதமும் தேவையில்லை.  
    • மற்றொரு பாத்திரத்தில், அரை மணி நேரம் ஊறவைத்த துவரம் பருப்பினை தண்ணீர் ஊற்றி முக்கால் பாகமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால், குக்கரில் நன்றாக பருப்பு குழையும் படியும் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். 
    • பிறகு களி நன்றாக வெந்ததும், நன்கு கிளறி விட வேண்டும். கவனிக்க வேண்டிய ஒன்று தண்ணீர் சரியாக இருந்து வருகிறதா என்பதுதான். அடுப்பை அணைத்துவிட்டு சூடான மாவின் மீது, அப்படியே சிறிது தண்ணீர் தெளித்து கரண்டியால் எடுத்து சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும். 
    • இதற்கடுத்து, இடியாப்பம் பிழையும் குழாயில் பெரிய முறுக்கு தட்டு வைத்து அதில், நாம் செய்து வைத்த கேழ்வரகு களியை சேர்த்து பிழிய வேண்டும். 
    • அதிலிருந்து சிறிது பிழிந்த களியை எடுத்து, அதனுடன் நாம் முன்னரே தயார் செய்து வைத்த வெல்லப் பாகினை, இதில் சற்று ஊற்ற வேண்டும். பின்பு, அதனுடன் துவரம் பருப்பு, வேர்க்கடலை பொடி, எள்ளுப் பொடி தூவி பரிமாறினால் சுவையோ சுவை தான்…

    சத்து: கேழ்வரகில் புரதச் சத்து நிறைந்து காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    இதையும் படிங்க, இதோ! ஆரோக்கியமான கேரள முறையில் கேழ்வரகு குழாப்புட்டு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....