Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தி.மு.க விற்கு இந்து ஆலயங்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வுதான் - வானதி சீனிவாசன் அறிக்கை!

    தி.மு.க விற்கு இந்து ஆலயங்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வுதான் – வானதி சீனிவாசன் அறிக்கை!

    ‘மதச்சார்பின்மை, நாத்திக வாதம் பேசும் தி.மு.க’விற்கு இந்து ஆலயங்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வு உண்டு’ என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    ஹிந்துக்கள் மனதை தி.மு.க., அரசு புண்படுத்துகிறது, என, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க – எம்.எல்.ஏ., வானதி குற்றம்சாட்டியுள்ளார்.

    அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது :

    ‘மதச்சார்பின்மை, நாத்திக வாதம் பேசும் தி.மு.க’விற்கு இந்து ஆலயங்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வு கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்து ஆலயங்களில் பிரச்சனைகளை உருவாக்குவது வாடிக்கையாகி வருகிறது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த தமிழகம் ஒரு ஆன்மீக மண் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கோவில்கள் உள்ளன.

    என்னதான் இந்து வெறுப்பைக் காட்டினாலும் தமிழகத்தின் அடையாளமாக இன்றளவும் இருப்பது சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் கட்டிய பிரம்மாண்ட கோவில்கள் தான். கோவில்கள் இல்லாமல் தமிழகம் இல்லை, தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு இல்லை எனவே தமிழகத்தை தொடர்ந்து தங்கள் பிடியில் வைத்திருக்க கோவில்களின் பாரம்பரியத்தை சிதைக்கும் வேலையில் இறைநம்பிக்கை அற்ற தி.மு.க அரசு ஈடுபட்டு வருகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். கடந்த, 2006- -11 தி.மு.க., ஆட்சியில், நடராஜர் கோவிலை மதச்சார்பற்ற அரசு எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய தீட்சிதர்கள் தங்களது உரிமையை மீட்டெடுத்துள்ளனர்.

    பத்து ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நடராஜர் கோவிலை கைப்பற்ற, அறத்திற்கு புறம்பான வழிகளில் முயற்சிக்கிறது.தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் இல்லாத கோவிலில் ஆய்வு நடத்த குழுவை அனுப்புவது, எந்த விதத்தில் நியாயம்? நடராஜர் கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள தடையில்லை.

    ஆனால், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நேரடி நடவடிக்கையில் இறங்குவது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல்.ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் பூஜை செய்வதோடு தி.மு.க.,வினர் நிறுத்திக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் – திருப்பி அனுப்பிய கடலோர காவல்படை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....