Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கஞ்சா பயன்படுத்த தாய்லாந்தில் இனி தடையில்லை: அதிரடி சட்டம் நிறைவேற்றம்!

    கஞ்சா பயன்படுத்த தாய்லாந்தில் இனி தடையில்லை: அதிரடி சட்டம் நிறைவேற்றம்!

    தாய்லாந்து நாட்டில் மக்களுக்கு கஞ்சா செடி வளர்க்கவும், விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிகக் கடுமையான போதைப் பொருள் தடை சட்டங்கள் நடைமுறையில் உள்ள தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில், கஞ்சா வளர்க்க, விற்க அனுமதி அளித்த முதல் நாடாகியுள்ளது தாய்லாந்து. ஆனால், உல்லாசத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது தொடர்ந்து தடை செய்யப்பட்டு தான் இருக்கிறது. கஞ்சா செடி வளர்ப்பதை ஊக்குவிக்க, 10 லட்சம் கஞ்சா செடிகளை தாய்லாந்து அரசே விநியோகம் செய்கிறது.

    ஹெம்ப் எனும் சணல் வகைப் பயிர் மற்றும் கஞ்சா முதலியவற்றின் மூலமாக வருமானம் ஈட்ட தாய்லாந்து மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என கூறியுள்ளார், தாய்லாந்து துணை பிரதமரும், சுகாதார அமைச்சருமான அனுதின் சர்ண்வீரகுல். வியாழக்கிழமை முதல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, வீடுகளில் ஆறு கஞ்சா செடிகள் வரை தொட்டிகளில் வளர்க்கலாம். நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று பயிரிட்டு வரலாம். நுகர்வோரும், கஞ்சா கலந்து செய்யப்பட்ட உணவுப் பொருள் மற்றும் பானங்களை உணவகங்களில் கேட்டு வாங்கி சாப்பிடலாம் என்றும் அவர் கூறினார்.

    தாய்லாந்து முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் கஞ்சாவைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். மருத்துவத்திற்காக கஞ்சாவைப் பயன்படுத்த சட்டப்படி அங்கீகரித்த முதல் ஆசிய நாடு தாய்லாந்து தான். இதற்கான அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் புகைப் பிடிக்கவும் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த விதியை மீறினால், கைது செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 4,000 பேரை, இத்திட்டத்தின் கீழ் விடுவிக்க திட்டமிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. கஞ்சா கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான சட்ட வரைவு ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் காலப்போக்கில் தளர்ந்துபோக வாய்ப்புள்ளது என வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.

    கொரோனா கால வீழ்ச்சியில் இருந்து, தாய்லாந்தின் சுற்றுலாப் பொருளாதாரம் தற்போது தான், மீண்டு வரத் தொடங்கியுள்ளது. ஆகவே, தளர்த்தப்பட்ட கஞ்சா விதிகள் காரணமாக, தாங்கள் விரும்புகின்ற இடத்தில், விரும்புகின்ற நேரத்தில் கஞ்சா பற்ற வைக்க முடியுமா என்று தான் சுற்றுலாப் பயணிகள் சிந்திப்பார்கள். ஆனால், பொது இடத்தில் கஞ்சா பற்ற வைக்க அனுமதி இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. அத்துடன், 0.2%-க்கு மேல் போதை தரும் டி.எச்.சி. உள்ள கஞ்சாப் பொருட்களை விற்க தடை நீடிக்கிறது.

    கஞ்சாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும், மருந்துப் பொருட்களை கொண்டு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கான சந்தையை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்வது தான் தாய்லாந்து அரசின் அதிகாரபூர்வ இலக்காகும். மருத்துவத்திற்கும், உணவிற்கும் மட்டுமே அனுமதி அளிப்பதாகவும், உல்லாசத்திற்கு நுகர அனுமதி இல்லை என்றும் கூறுகிறது அரசாங்கம்.

    மதுபான விடுதிகளில் இனி இதை வைக்க வேண்டும்; வைத்தால் என்ன ஆகும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....