Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமதுபான விடுதிகளில் இனி இதை வைக்க வேண்டும்; வைத்தால் என்ன ஆகும்?

    மதுபான விடுதிகளில் இனி இதை வைக்க வேண்டும்; வைத்தால் என்ன ஆகும்?

    மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றக்குடிய பொருட்களை உட்கொள்வதற்கு எதிரான எச்சரிக்கை பதாகைகளை கட்டாயமாக வைக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

    ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்களில் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றக்கூடிய பொருட்களை உட்கொள்வதற்கான எச்சரிக்கை பலகைகளை வைக்குமாறு கலால் துறை ஜுன் 6 ம் தேதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இந்த உத்தரவின் படி அதிகாரிகள் ஆய்வின் போது எச்சரிக்கை பதாகையினை இல்லாவிடில் அந்நிறுவனம் தக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.

    அனைத்து HCR (ஹோட்டல், கிளப், உணவகம்) உரிமம் பெற்றவர்கள் போதைப்பொருள் நுகர்வு மற்றும் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு பதாகையை தங்களின் வளாகத்தில் இரு இடங்களில் பொருத்த வேண்டும் என்று இதன்மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை பின்பற்றாத நிறுவனத்தின் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி தெரிவித்துள்ளது.

    புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு நகரில் உள்ள ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்கள் (HCR) மற்றும் பிற மதுபானம் வழங்கும் வளாகங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கலால் துறை தரவுகளின்படி, மே 6 ஆம் தேதி வரை HCR வகை வளாகங்களின் மொத்த எண்ணிக்கை 964 ஆகும், இதில் 162 ஹோட்டல்கள், 698 உணவகங்கள் மற்றும் 48 கிளப்புகள்.

    இதில் சில விருந்துகள் மற்றும் பார்ட்டி ஹால்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு மதுபான சேவைகளுக்கு உரிமம் பெற்ற மோட்டல்கள், மற்றும் பண்ணை வீடுகள் ஆகியவையும் அடங்கும். தில்லி அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த மதுபானம் மீதான கலால் வரி கொள்கையினால் நகரம் முழுவதும் தனியாருக்குச் சொந்தமான மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு, கலால் துறையின் புதிய கொள்கையின்படி தங்கள் வளாகங்களில் மதுபானம் வழங்குவதற்காக ஹோட்டல்கள், கிளப்புகள், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றதனால் ஏற்பட்ட உயர்வு ஆகும்.

    கத்தாரில் வெப்பநிலை உயர்வால் தொழிலாளிகள் மரணம்; கண்டுக்கொள்ளுமா அரசு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....