Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கத்தாரில் வெப்பநிலை உயர்வால் தொழிலாளிகள் மரணம்; கண்டுக்கொள்ளுமா அரசு?

    கத்தாரில் வெப்பநிலை உயர்வால் தொழிலாளிகள் மரணம்; கண்டுக்கொள்ளுமா அரசு?

    கத்தார் நாடு தொடர்ச்சியாக 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை அனுபவித்து வருகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அங்கு வேலை வாய்ப்புக்காக, தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக புலம்பெயர்ந்து சென்றுள்ள ஒரு கோடியே 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்தான்.

    இதற்கு சான்றாக நேபாளின் டோகாவிலிருந்து கத்தார் நாட்டிற்கு தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்ற ததான் என்ற முப்பத்தி ஒரு வயது இளைஞன் தன் மனைவியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது, மூக்கில் ரத்தம் வழிந்து, தனது நண்பர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார்.

    இதனைப்பற்றி மருத்துவர்களிடம் கேட்ட பொழுது மருத்துவர்கள் இதயம் செயலிழப்பு தான் இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். முப்பத்தி ஒரு வயது இளைஞர் இயற்கையாக இதயம் செயலிழந்து மரணமடைவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்கு இத்தகைய இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர். கத்தாரில் மட்டும் இதுவரை 577 நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதயம் செயலிழப்பால் இதுவரை இறந்துள்ளனர். கடந்த 8 வருடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருநூறு பேர் இதய செயலிழப்புக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் வெப்ப அழுத்தமே. இது தடுக்கக் கூடிய ஒன்று.

    இதனைப்பற்றி கத்தாரின் தொழில் நலத்துறை அமைச்சர் நலத்துறை அமைச்சர் கூறுகையில், கத்தாரில் 32.1 டிகிரி செல்சியசுக்கு மேல் தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்க கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இச்சட்டத்தினை நிறுவனங்கள் கடைபிடிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். ததான் மரணத்தை பற்றி கேள்வி எழுப்பிய போது, அவருடைய மரணம் வெப்ப அழுத்தத்தினால் தான் ஏற்பட்டது என நிரூபணமானால் அவருக்கு உரிய நிவாரணத்தை அவர் பணிபுரிந்த நிறுவனம் வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

    ஆனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் கத்தாரில் வெப்பம் அதிகமாக உள்ளது எனவும், அதனைப் பற்றி தான் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.

    அதிக வெப்ப அழுத்தத்தினால் தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக சூரிய ஒளியில் வேலை செய்பவர்கள் அதிகமாக அதனுடன் போராடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    வெப்ப அழுத்தத்தினால் இதய செயலிழப்பு என்பது தடுக்க கூடிய ஒன்று என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், கத்தார் அரசாங்கமும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக கத்தாருக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கின்ற நாடுகள் ஒன்றிணைந்து இப்பிரச்சனைக்கு ஒரு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை வலுத்து வருகின்றது.

    மணமகன் ஓட்டம் ; மாமனாருடன் நடந்து முடிந்த திருமணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....