Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைனில் பாஸ்போர்ட் வழங்கும் ரஷ்யா! கண்டனம் தெரிவிக்கும் உக்ரைன்!

    உக்ரைனில் பாஸ்போர்ட் வழங்கும் ரஷ்யா! கண்டனம் தெரிவிக்கும் உக்ரைன்!

    ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் நகரங்களில் ரஷ்யா பாஸ்போர்ட்டுகளை வழங்கி வருகிறது.

    தெற்கு உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கெர்சன் மற்றும் மெலிடோபோல் நகரங்களில் உள்ள உள்ளூர் மக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் தனது பிரதேசத்தில் ரஷ்ய குடிமக்களை உருவாக்குவதை “ரஷ்யமயமாக்கல்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடைமுறையை துரிதப்படுத்தி வருகிறார்.

    ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் சனிக்கிழமையன்று நடந்த விழாவில் கெர்சனில் உள்ள 23 குடியிருப்புவாசிகள் ரஷ்ய பாஸ்போர்ட்டைப் பெற்றதாகக் கூறுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் ரஷ்ய பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அவை பரிசீலனையில் உள்ளதால் தற்போது வழங்க முடியாது என்று டாஸ் கூறியுள்ளது. கெர்சனில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட இராணுவ ஆளுநர் வோலோடிமிர் சால்டோ, “எங்கள் கெர்சோனைட் தோழர்கள் அனைவரும் பாஸ்போர்ட்டையும் [ரஷ்ய] குடியுரிமையையும் கூடிய விரைவில் பெற விரும்புகிறார்கள்” என்றார்.

    ரஷ்யாவின் இச்செயலினை உக்ரைன் தனது நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான “அப்பட்டமான மீறல்” என்று கண்டனம் தெரிவித்ததோடு, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் ஆணை “சட்டப்படி செல்லாது” என்று கூறியது.

    2014 ஆம் ஆண்டு முதல் அதன் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய பகுதிகளான கிரிமியா மற்றும் டான்பாஸின் பெரும்பகுதிகளில்
    வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட்களை ரஷ்யா விநியோகித்ததை இந்த கொள்கை பின்பற்றுகிறது.

    ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கும் மற்றும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் தன்னாட்சி “மக்கள் குடியரசுகளை” உருவாக்கியதற்கும் சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய ரஷ்யப் படைகளால் உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலும் அதே செயல்முறை நடப்பதால்,உள்ளூர்வாசிகள் ரஷ்யர்களாக மாறியவுடன், அவர்களை “பாதுகாக்க” வேண்டும் என்று ரஷ்யா உரிமை கோரலாம் என உக்ரைன் அஞ்சுகிறது.

    ஒரே ஒரு கருத்து; இந்தியா முழுவதும் வெடித்த போராட்டங்கள்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....