Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரே ஒரு கருத்து; இந்தியா முழுவதும் வெடித்த போராட்டங்கள்!

    ஒரே ஒரு கருத்து; இந்தியா முழுவதும் வெடித்த போராட்டங்கள்!

    நபிகள் நாயகம் பற்றிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா வெளியிட்ட கருத்துக்கு எதிராக உ.பி., டெல்லி மற்றும் பிற நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

    போராட்டக்காரர்கள், முஹம்மது நபியைப் பற்றி பேசியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர்களான நுபுர் சர்மா மற்றும் நிரந்தரமாக நீக்கப்பட்ட தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் பல போராட்டங்கள் வெடித்தன. டெல்லியில் ஜமா மசூதிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோன்று உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ், ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மஸ்ஜித், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதற்கிடையில், டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் எந்த போராட்டத்திற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் யாரென்று தங்களுக்கு தெரியாது எனவும், அவர்களுக்கு நாஙகள் ஆதரவளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் உள்ள அட்டாலாவிலும் பிரார்த்தனை முடிந்ததும் போராட்டக்காரர்கள் பாஜக தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்ப போராட்டம் இங்கு தொடங்கியது.

    சஹாரன்பூரிலும் முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதே போன்ற நிகழ்வுகள் மொராதாபாத் மற்றும் லக்னோவிலும் பதிவாகியுள்ளன. மேலும், சில இடங்களில் தங்களது கோரிக்கைகளை மாவட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

    போர்ட்டக்காரர்களால் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் சமூக வலைதளங்கள் மற்றும் அவர்கள் கூடுகின்ற இடங்களையும் காவல் துறை உண்ணிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கத்தாரில் வெப்பநிலை உயர்வால் தொழிலாளிகள் மரணம்; கண்டுக்கொள்ளுமா அரசு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....