Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஇதோ! ஆரோக்கியமான கேரள முறையில் கேழ்வரகு குழாப்புட்டு!

    இதோ! ஆரோக்கியமான கேரள முறையில் கேழ்வரகு குழாப்புட்டு!

    கேழ்வரகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரளா ஸ்டைலில் கேழ்வரகு குழாப்புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

    தேவையான பொருள்கள்:

    • கேழ்வரகு மாவு- ஒரு கப் 
    • தேங்காய்த் துருவல்- ஒரு கப் 
    • வெல்லத் துருவல்- ஒரு கப் 
    • சீரகம்-கால் தேக்கரண்டி 
    • ஏலக்காய்த்தூள்- கால் தேக்கரண்டி 
    • உப்பு, தண்ணீர், நெய் தேவையான அளவு 

    செய்முறை:

    • ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உப்பு, சிறிது அளவு நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
    • பிறகு புட்டு செய்யும் குழாவை எடுத்து முதலில் புட்டைச் சேர்த்து பிறகு தேங்காய்த் துருவலைச் சேர்க்க வேண்டும். இது போல் மாறி மாறி சேர்த்து மூடி 15 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.Ragi puttu
    • பிறகு வெல்லத் துருவலைத் தூவி, விருப்பப்பட்டால் வாழைப்பழமும் பிசைந்து சேர்த்துப் பரிமாறலாம். 
    • கேழ்வரகு புட்டுடன் ஒரு டம்பளர் கட்டன் சாயா குடித்தால், மேலும் சுவைக் கூடும். இதை கேரளாவில் காலை உணவாக அதிக பேர் சாப்பிடுகிறார்கள்.

    (கேழ்வரகை நன்கு சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு, தண்ணீர் இன்றி  துணியில் சிறிது நேரம் உலர வைத்தபின் அரைத்து, சில நிமிடங்கள் கடாயில் வறுத்து வைத்து உபயோகப்படுத்தினால் புட்டும் கொழுக்கட்டையும் மிக அருமையாக வரும். இந்த வேலைகள் கொஞ்சம் கடினம் தான் ஆனால் செய்தால் ருசியாக உண்ணலாம்.)

    சத்து: கேழ்வரகில் அதிக புரதச் சத்து உள்ளது. இதனால் அனைத்து வயதினரும் கேழ்வரகை உண்ணலாம். குறிப்பாக எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது கேழ்வரகால் செய்த உணவை உண்ணுவது நல்ல பயனைத்  தரும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....