Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புகோடைக்கு ஏற்ற நம்ம பாரம்பரிய கேப்பைக்கூழ் செய்து ருசித்துக் குடிக்கலாம்!

    கோடைக்கு ஏற்ற நம்ம பாரம்பரிய கேப்பைக்கூழ் செய்து ருசித்துக் குடிக்கலாம்!

    கோடையில் குளுகுளு என உணர வைக்கும் கேப்பைக்கூழ் எப்படி செய்வது என்பதைக் இங்கே காணலாம் வாருங்கள். 

    தேவையானப் பொருட்கள்: 

    1. கேழ்வரகு மாவு- 1 கப் 
    2. தயிர்- ஒரு கப் 
    3. வெங்காயம்- 1 
    4. மாங்காய்- 1
    5. உப்பு, தண்ணீர்- தேவையான அளவு

    செய்முறை: 

    • ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மறுபுறம் ஒரு கப் கேழ்வரகு மாவினை எடுத்து ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கைகளால் கரைத்துக் கொள்ள வேண்டும். 
    • நன்றாக கொதிக்கின்ற தண்ணீரில் கரைத்து வைத்த கேழ்வரகு மாவினை எடுத்து ஊற்றி நன்றாக கிளறிவிட வேண்டும். தேவையான அளவு உப்பினை இப்போதும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது கூழ் கரைக்கும் போதும் சேர்த்துக் கொள்ளலாம். 
    • பிறகு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் தண்ணீர் பதம் இன்றி திடமான பதத்திற்கு மாறிவிடும். மாவனாது நன்றாக கொதித்து நிறைய முட்டை தோன்றி மறைவதை பத அளவாக வைத்துக் கொள்ளலாம். கட்டியாக மாறியவுடன் 2 அல்லது 3 மணி நேரம் வரை நன்றாக ஆறவிட வேண்டும். 
    • பின்பு இரண்டு கரண்டி அளவு கூழினை எடுத்து, அதனுடன் ஒரு கப் அளவு தயிர் ஊற்றி, தேவையான அளவு உப்பு, தண்ணீர், பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கைகளால் கரைத்துக் கொள்ளலாம். 
    • இதற்கு இணையாக உப்பு, மிளகாய் சேர்த்த மாங்காய்  சீவல் நாக்கில் சுவை அள்ளும். 
    • அவ்வளவு தான்… ஒரு மடக்கு கேப்பைக்கூழ் ஒரு கடி மாங்காய் அப்பப்பா…

    சத்து: கேப்பைக் கூழில் இரும்புச் சத்து, கால்சியம், அமினோ அமிலம், நியாசின், தையமின் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. கேப்பைக் கூழ் குடிப்பதால் எலும்புகளும் பற்களும் வலுப்பெறும்.

    இலங்கையில் உணவுப் பஞ்சத்தால் மக்கள் மடியும் அவலநிலை உண்டாக வாய்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....