Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இலங்கையில் உணவுப் பஞ்சத்தால் மக்கள் மடியும் அவலநிலை உண்டாக வாய்ப்பு!

    இலங்கையில் உணவுப் பஞ்சத்தால் மக்கள் மடியும் அவலநிலை உண்டாக வாய்ப்பு!

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. வரலாறு காணாத விலைவாசி உயர்வால், மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இலங்கை அரசின் தவறான விவசாய கொள்கைகளினால், விவசாயத்துறை முழுவதும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    இதனால், வருகின்ற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்று, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்திருப்பது, இலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் தவறான விவசாய கொள்கைகளினால், விவசாயத்துறை முழுவதுமாக வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது.

    இலங்கையில் 33 இலட்சம் மெட்ரிக் அரிசி, ஒரு வருடத்திற்கு மட்டும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. டாலர் நெருக்கடியின் எதிரொலியாக, உணவுப் பொருட்களின் இறக்குமதியும் இனிவரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படலாம். வரும் காலங்களில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொள்ள இலங்கை அரசு, வெறும் வாய் வார்த்தையாக சொல்கிறதே தவிர, முறையான திட்டங்கள் ஏதுமில்லை.

    இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு தீவிரமடையும் பட்சத்தில், வருகின்ற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கி பட்டினியால் மடியும் அபாயம் ஏற்படும். அதனால், பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே சிறிய அளவிலாவது, சுய வேளாண்மையில் ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, வரும் காலத்தில் உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவு குறைக்க முடியும் என்று தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.

    வருகின்ற ஜூலை 2023 ஆண்டு வரை இலங்கை நாட்டுக்கு போதுமான மருத்துவப் பொருட்கள் அளிக்கப்படும் என இலங்கைக்கான உலக சுகாதார மையத்தின் பிரதிநிதி கலாநிதி அலகா சிங்கை, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் ஆதரவு, இலங்கைக்கு கிடைக்கும் பட்சத்தில், இந்த நிலை மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் நிச்சயம் உள்ளது.

    கோலி புன்னகை நீடிக்குமா? பழிதீர்ப்பாரா சஹால்? – குவாலிஃபையர் ஒரு முன்னோட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....