Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகோலி புன்னகை நீடிக்குமா? பழிதீர்ப்பாரா சஹால்? - குவாலிஃபையர் ஒரு முன்னோட்டம்!

    கோலி புன்னகை நீடிக்குமா? பழிதீர்ப்பாரா சஹால்? – குவாலிஃபையர் ஒரு முன்னோட்டம்!

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்குச் செல்லும் மற்றொரு அணியினைத் தீர்மானிக்கும் போட்டியான இரண்டாவது குவாலிஃபையர் இன்று நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளின் பலம், பலவீனம் மற்றும் இந்தத் தொடரில் கடந்து வந்த பாதைகளை பற்றி பார்க்கலாம்..

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு..

    பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு சற்று அதிர்ஷ்டம் அதிகம் என்றே சொல்ல வேண்டும். மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர், எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தினை தக்கவைத்தது.

    டெல்லி கேப்பிடல்ஸின் கடைசி ஆட்டம்தான் நான்காவது இடத்தினை தீர்மானிக்கும் போட்டியாக இருந்தது. அந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆஃப் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். 

    டெல்லிக்கும் மும்பைக்கும் நடந்த அந்த கடைசி போட்டியில் மும்பை அணியானது ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியினை வீழ்த்தியது. டெல்லியின் இந்த தோல்வியினால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    நான்காவது இடத்தினைப் பிடித்திருந்த பெங்களூரு அணி, இறுதிப் போட்டிக்குச் செல்ல இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். முதல் போட்டி லக்னோ அணியுடனும், இரண்டாவது போட்டி குஜராத், ராயல்ஸ் அணிகளில் ஏதோ ஒரு அணியுடனும் விளையாட வேண்டும்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியினை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

    சிறிது அதிர்ஷ்டத்தின் மூலம் உள்ளே வந்த பெங்களூரு அணி மீண்டும் அதே மாதிரியான அதிர்ஷ்டத்தினை நம்பி இருக்கவில்லை என்பதினை நேற்று முன்தினம் விளையாடிய போட்டியில் தெளிவாகக் காட்டியுள்ளது.

    ராஜத் பட்டிதார், ஹேசல்வுட், ஹஸரங்கா, ஹர்ஷல் படேல், தினேஷ் கார்த்திக், விராட் கோலி என அணியில் உள்ள அனைவரும் சிறப்பான பங்கினை அளித்ததன் மூலம் ஒரு முழுமையான வெற்றியினை பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

    பேட்டிங்கைப் பொறுத்த வரையில் பிரான்சிஸ் டு பிளெஸிஸ், விராட் கோலி, பட்டிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என ஒரு நீண்ட அதிரடியான பேட்டிங் வரிசையினைக் கொண்டுள்ளது.

    பௌலிங்கிலும் ஹஸரங்கா, ஹர்ஷல் படேல், ஹேசெல்வுட் என இந்த தொடரின் சிறந்த பௌலர்களை வைத்துள்ளது. ஹஸரங்கா இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    அணியில் அதிகபட்சமாக டு பிளெஸிஸ் 443 ரன்கள் அடித்துள்ளார். பேட்டிங் சராசரியை பொறுத்த வரையில் தினேஷ் கார்த்திக் 64.80 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார்.

    இறுதிநேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பெங்களூரு அணிக்கு பெரிய பலமாய் உள்ளது. ஹஸரங்காவின் பௌலிங், தோள்பட்டை வலியிலிருந்து குணமாகி திரும்பியுள்ள ஹர்ஷல் படேலின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

    கடந்த போட்டியில் பட்டிதார், தினேஷ் கார்த்திக் தவிர்த்து பெரிதாக யாரும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ராஜஸ்தான் ராயல்ஸ்..

    முதலாவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி ஓவரில் தோல்வியினைத் தழுவியது.

    இன்று நடைபெறும் போட்டி இந்த அணிக்கு இரண்டாவது வாய்ப்பாகும். அதிக ரன் அடித்த வீரர், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என தரமான வீரர்கள் இருந்தாலும் இந்த அணி தனது கடைசி போட்டியில் தடுமாறியுள்ளது.

    பட்லர், சஞ்சு சாம்சன் தவிர அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்காத தவறுவதும், இறுதி ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதும் இந்த அணிக்கு சற்று பின்னடைவைக் கொடுத்துள்ளது.

    பிரஷித் கிருஷ்ணா இன்னிங்ஸ் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசினாலும், டெத் ஓவர்களில் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பவராக உள்ளார்.

    இந்த தொடரில் இரண்டு முறை மோதியுள்ள இவ்விரு அணிகளும் தலா ஒரு முறை வென்றுள்ளன. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியும் வென்றுள்ளது.

    போட்டி நடைபெறும் மைதானமானது பெங்களூருக்கு சாதகமான ஒன்றாக உள்ளது. இந்த மைதானத்தில் 12 போட்டிகளை விளையாடியுள்ள பெங்களூரு, ஏழு போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய விவரங்கள்..

    ராஜஸ்தான் அணிக்கேப்டன் சஞ்சு சாம்சன், ஹஸரங்காவிடம் ஐந்து முறை அவுட் ஆகியுள்ளார்.  இது வரை 23 பந்துகளை எதிர் கொண்ட சாம்சன் 18 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

    சென்ற ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் முதலில் விளையாடிய அணி ஆறு போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும் வென்றுள்ளது.

    ராஜஸ்தான் அணியின் பௌலர் யுவேந்திர சஹால் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராக சிறப்பான தரவினை வைத்துள்ளார்.  10 போட்டிகளில் மூன்று முறை கார்திக்கினை அவுட் செய்துள்ளார் சஹால்.

    கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள்..

    ராஜஸ்தான் – பட்லர், சஞ்சு சாம்சன், அஸ்வின், சஹால், படிக்கல்.

    பெங்களூரு – டு ப்ளெஸிஸ், மேக்ஸ்வெல், ஹஸரங்கா, கோலி, ஹர்ஷல், பட்டிதார், தினேஷ் கார்த்திக்.

    ஆடலும், பாடலும் குறித்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....