Monday, March 18, 2024
மேலும்
  Homeஅறிவியல்'மனநிலை மல்லாக்க கிடக்குது நண்பா' - மனநிலையை தெரிஞ்சிக்க புது செயலி!

  ‘மனநிலை மல்லாக்க கிடக்குது நண்பா’ – மனநிலையை தெரிஞ்சிக்க புது செயலி!

  மனிதனின் மன நிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு நல்ல மனிதனின் மனநிலை என்பது அமைதியான மனதுடன் இருப்பது என்பதைக் குறிக்கும் .மன அமைதி உடையவன் எப்போதும் உணர்ச்சி வசப்பட மாட்டான் விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லாவற்றையும் கவனிப்பான். அவனுக்கு தன்னுடனோ உலகத்துடனோ ஒரு சண்டையும் இராது. எல்லோர் மீதும் அனுதாபத்துடன் இருப்பான்.

  அவன் தன மனத்தில் உணர்ச்சி வெறுப்பு இவற்றின் சாயல் கூட ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறான். அவை ஏற்படின் அவற்றை அடக்கவும் மிகைக்கவும் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறான். அவனுக்கு மற்றவர் மீது அனுதாபம் கொள்வது எளிதாகிறது. மற்றவர்களின் மன நிலையை புரிந்து கொள்கிறான்.

  அந்த சூழலில் அவர்களை கண்டிப்பது, அவர்களுக்கு எதிராக தன்னை ஆக்கிக் கொள்வது எத்துணை பெரிய அறிவீனம் என்பதையும் அறிந்து கொள்கிறான். இவ்விதம் அவன் இதயத்தில் ஒரு தெய்வீக அருள் உணர்வு வளர்கிறது. அந்த தெய்வீக அருளை கட்டுப்படுத்த முடியாது. அது மனிதனின் மன நிலையை அமைதி ஆக்குகிறது.

  இத்தகைய தன்மையுடைய உங்களின் மன நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமா? அதற்காக வடிவமைக்கப்பட்டதுதான், ‘மூட் – சீ ஹவ் யு பீல்’ என்ற செயலி. அதாவது, மன நிலையை அளக்க உதவும்
  ஒரு செயலி!

  இதன் பயன் என்னவென்றால், மனிதனின் மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை, வண்ணங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, அவர் இலகுவான மன நிலையில் இருந்தால், மென்மையான நிறங்களை தேர்ந்தெடுக்கலாம்.

  இப்படி, ஒரு நாளில், மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நேரும்போதெல்லாம் அவர், தன் இந்த செயலியைத் திறந்து, வண்ணங்களால் குறிப்பெடுக்கவேண்டும். இக்குறிப்புகளை, ‘மூட் மீட்டர்’ என செயலியை உருவாக்கியோர் குறிப்பிடுகின்றனர்.

  இப்படி, வாரம் மற்றும் மாதக் கணக்கில் பதிவுகளைச் செய்தால், பயனாளியின் மனநிலை மாற்றம் குறித்த தெளிவு அவருக்கே ஏற்படும். அவர், சோர்வான மன நிலையில் இருந்தால், இந்த செயலிக் குறிப்புகளைப் பார்த்து, எப்போது அவருக்குள் மாற்றம் ஏற்பட்டது என்பதை, நோட்டம் விட்டாலே தெரிந்துகொள்ளலாம். மூட் செயலியை பயன்படுத்தும்போது, சுய விழிப்புணர்வு மற்றும் சுய மனக்கட்டுப்பாடு வர வாய்ப்புகள் அதிகம்.

  உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மன ஆரோக்கியம் என்பது “ஒரு நபர் தனது சொந்த திறன்களை உணர்ந்து, வாழ்க்கையின் இயல்பான அழுத்தங்களை சமாளிக்க முடியும், உற்பத்தி ரீதியாகவும் பலனளிக்கும் விதமாகவும் செயல்படக்கூடிய ஒரு நல்வாழ்வு நிலை” என்று வரையறுக்கப்படுகிறது. அவரது சமூகத்திற்கு பங்களிப்பு” ஆகும்.

  மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்; கைது செய்யப்படுவாரா ராஜபக்சே?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....