Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்; கைது செய்யப்படுவாரா ராஜபக்சே?

    மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்; கைது செய்யப்படுவாரா ராஜபக்சே?

    இலங்கையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வன்முறை கும்பலை ஏவிவிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவை உடனே கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால், ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததை அடுத்து, கடந்த 9ம் தேதி மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் பதவி விலகுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

    ராஜபக்சே ஆதரவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர், மக்கள் மீது கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தினர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஒருங்கிணைந்து குண்டர்களைத் திருப்பி தாக்கி உள்ளாடைகளுடன் ஓட ஓட விரட்டினர். கொழும்பில் ராஜபக்சே கும்பல் நடத்திய இந்த கொடூர தாக்குதல் இலங்கை மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன . ராஜபக்சே ஆதரவாளர்களும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர்.

    மேலும், கோபமடைந்து ஆளும் இலங்கை பொது ஜன பெரமுனா கட்சியின் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகள், அவர்களது பினாமிகளின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர். இந்தக் கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    மக்கள் கலவரத்திற்கு பிறகு ராஜபக்சே கடற்படை தளபதி வீட்டில் தஞ்சமடைந்திருந்தார். இதையடுத்து மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொழும்புவில் மஹிந்த ராஜபக்சேவின் இல்லத்தில் வைத்தும், அவரிடம் சிஐடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது எப்படி என்றும், காலே மற்றும் கொலுபிட்டியாவில் நடந்த தாக்குதல் குறித்தும் அவரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

    அதேபோல் ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் பக்சேவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வன்முறை வழக்கில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்து உள்ளன.

    விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக உத்தரவு..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....