Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜக தலைவர் அண்ணாமலை இனி அரசியல்வாதி மட்டுமல்ல; நடிகரும் கூட! - முழுத்தகவல் உள்ளே!

    பாஜக தலைவர் அண்ணாமலை இனி அரசியல்வாதி மட்டுமல்ல; நடிகரும் கூட! – முழுத்தகவல் உள்ளே!

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து முடித்துள்ளார்.

    அண்ணாமலை குப்புசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 ஜூலை, 2021 அன்று நியமிக்கப்பட்டார்.

    2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

    அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அனுகியுள்ளார்.

    திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலை அவர்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை ரூ.1 மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

    இதற்கிடையில் இன்று மாலை 4 மணிக்கு அரபி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அண்ணாமலையின் இந்த முதல் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக பாஜகவினர் காத்துக்கொண்டுள்ளனர்.

    கடந்த 2019 ஆண்டு அவர் தனது காவல் துறை பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழ்நாடு திரும்பினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர், இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். பல மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரிடம் கேட்ட பின்பும் அவர் தனது முடிவை மாற்றவில்லை.

    2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், மத்திய அரசின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தியும் பேசி வரும் அண்ணாமலை, தனது சர்ச்சைக்குறிய பேச்சுக்களின் மூலமாக தமிழ்நாடு மக்களின் பரிட்சையமான முகமாகவே மாறிவிட்டார்.

    ஆடலும், பாடலும் குறித்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....