Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்னும் மூன்று மாதத்தில் கோவை முழுக்க முழுக்க "ஸ்மார்ட் சிட்டி'தான்!

    இன்னும் மூன்று மாதத்தில் கோவை முழுக்க முழுக்க “ஸ்மார்ட் சிட்டி’தான்!

    2015 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது, இந்திய நாட்டின் 100 நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

    நாட்டின் மற்ற நகரங்களை “ஸ்மார்ட்” ஆக ஊக்குவிக்கும் வகையில், இந்த நகரங்களின் பிரதி மாதிரிகளை உருவாக்குவதையும் இந்த பணி நோக்கமாகக் கொண்டுள்ளது. நகர்ப்புறங்களில் சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க ஸ்மார்ட் சிட்டி பணி சமூகங்களுக்கு உதவுகிறது.

    2016 ஆம் ஆண்டில், 20 நகரங்களின் முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டது மற்றும் இந்த 20 நகரங்களின் வளர்ச்சியை 2022 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த 20 நகரங்கள்: அகமதாபாத், புவனேஸ்வர், புனே, கோயம்புத்தூர், ஜபல்பூர், ஜெய்ப்பூர், சூரத், கவுகாத்தி, சென்னை, கொச்சி. , விசாகப்பட்டினம், இந்தூர், போபால், உதய்பூர், லூதியானா காக்கிநாடா, பெல்காம், சோலாப்பூர் மற்றும் புவனகிரி.

    இதனை தொடர்ந்து, கோவை மாவட்டம் குளங்களில் நடந்து வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர,மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கென, பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க, ‘கான்ட்ராக்டர்’களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து, ரூ.490 கோடியும், மாநில அரசிடம், ரூ.500 கோடியும் என, ரூ.990 கோடி பெறப்பட்டுள்ளது.இதில், 978.73 கோடிக்கு, 56 பணிகள் திட்டமிடப்பட்டு தற்போது, 32 பணிகள், ரூ.241.05 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு உள்ளன.

    தற்போது நடந்து வரும், 14 பணிகளுக்கு, ரூ.478.17 கோடி செலவிடப்பட்டுள்ளது. தவிர, ரூ.16.47 கோடி மதிப்பீட்டில், 10 புதிய பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், மாநகராட்சி வசம் இருக்கும் குளக்கரைகள் டைல்ஸ் பதித்தல், சைக்கிளிங் தளம் என பல்வேறு அம்சங்களுடன், அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை, பயோமைனிங் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. சமீபத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் கமிஷன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஒரு ஆண்டில் மட்டும், ரூ.120 கோடி செலவு செய்துள்ளோம். குளக்கரைகளில் கான்கிரீட் போடக்கூடாது என்ற கருத்து வந்ததையடுத்து, சில மாறுதல்களும் செய்துள்ளோம். வாலாங்குளத்தின் வட பகுதியில், 100 பேரும், பெரியகுளத்தில், 60 பேரும் வேலை செய்கின்றனர்.

    கான்ட்ராக்ட் முறையில் வேலை ஆட்களை அதிகரித்து பணிகளை வேகப்படுத்த சொல்லி இருக்கிறோம். செல்வசிந்தாமணி குளத்தில் கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டன. மற்ற குளங்களையும் மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதரசில பணிகளுக்கு மார்ச் 31ம் தேதிதான் பணி ஆர்டர் கொடுத்துள்ளோம். அதில், போட்டிங், மூவி ஆன் வாட்டர், எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் உள்ளிட்ட பணிகள் அடங்கும். இப்பணிகள் அடுத்தாண்டுக்குள் முடிந்துவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

    மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்; கைது செய்யப்படுவாரா ராஜபக்சே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....