Friday, March 15, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகணினி பயிற்றுநர் பணிக்கு வெளிவந்த அறிவிப்பு... உடனே விண்ணப்பியுங்கள்!

    கணினி பயிற்றுநர் பணிக்கு வெளிவந்த அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்!

    கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

    சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை . பி.எட் தகுதியுடன் பி.இ(கணினி அறிவியல்) அல்லது பி.எஸ்சி(கணினி அறிவியல்) அல்லது பிசிஏ அல்லது பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்கு தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம், சேலம் – 636005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    மேலும், நவம்பர் 10-ம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பங்கள் வந்து சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெறணும் ! ‘அடித்து நொறுக்கியும்’ அடங்காத அக்தர் – கடுப்பில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....