Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'இனி அப்படித்தான்' - சம்பள விஷயத்தில் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...

    ‘இனி அப்படித்தான்’ – சம்பள விஷயத்தில் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு…

    இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான ஊதியம் வீராங்கனைகளுக்கும் இனிமேல் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

    இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் ஆட்டங்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா ரூ. 5 லட்சமும் டி20 ஆட்டங்களுக்குத் தலா ரூ. 3 லட்சமும் பெற்று வருகிறார்கள். 

    ஆனால் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் இதைவிடவும் குறைவான அளவில் ஊதியம் பெற்று வந்தார்கள். இந்நிலையில் ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம அளவில் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் இனிமேல் டெஸ்ட் ஆட்டங்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா ரூ. 6 லட்சமும் டி20 ஆட்டங்களுக்குத் தலா ரூ. 3 லட்சமும் பெறவுள்ளார்கள். பிசிசிஐயின் இந்த அறிவிப்பு பெரும் மரியாதைக்குரிய ஒரு அறிவிப்பாக மாறியுள்ளது. பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். 

    இருப்பினும், ஆடவர், மகளிர் ஒப்பந்தங்களில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வருட ஒப்பந்தத்தில் உள்ள இந்திய வீராங்கனைகள் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் பெறுகிறார்கள். ஆனால் ஏ பிளஸ் ஒப்பந்தத்தில் உள்ள இந்திய ஆடவர் அணியைச் சேர்ந்தவர்கள் ரூ.7 கோடி பெறுகிறார்கள். எனவே இதிலும் சம அளவில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்யுமா என்ற ஆவல் மக்களிடையே எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெறணும் ! ‘அடித்து நொறுக்கியும்’ அடங்காத அக்தர் – கடுப்பில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....